உறவுகள்

அம்மா

இறைவன் தந்த பாடமதில்
படிக்க பாடமும் இல்ல
தேர்வும் இல்ல
எனறுமே எமக்கே வெற்றி...

அக்கா

துணைப் பாடமாய்
இறைவை தந்தன்
தனியே தேர்வு
எழுத வேண்டாம் என்று...

உறவு

அம்மா அப்பா சேர்ந்து
தந்த பாடமதில்
நல்ல பக்கம் சில
கிழிந்த பக்கம் பல்
எதை விட எதை படிக்க
ஏனோ குழப்பம் நெஞ்சினிலே
இருந்தாலும் படிக்கனுமே
இறுதியிலே வெற்றி பெற...காதலி

விருப்ப பாடமாய்
தேர்வு செய்து
விடிய விடிய படித்தும் கூட
இதயம் என்னும் தேர்வில்
இனிதே தோல்வியுற்றேன்...

மனைவி

கட்டாயப் பாடமாய்
தேர்வு செய்து
காலமெல்லாம் படித்தாலும்
கடைசியிலே தேர்ச்சி பயம்...

தோழி

தாய் மொழிப் பாடமாய்
தேர்வு செய்து
பக்கங்கள் ஏதும் படிக்காமலே
எழுதிய தேர்வில்
எல்லாம் வெற்றி கொண்டேன்...

வாழ்க்கை

இத்தனை பாடமும்
தேர்ச்சி பெற்ற நீ தான்
வெற்றி வீரனட...

எழுதியவர் : (6-May-19, 12:24 pm)
Tanglish : uravukal
பார்வை : 1250

மேலே