அவசர உலகம்

இது ஓர் நவீன காலகட்டம்
மக்கள் கைப்பேசி, கணினிகள் இல்லாமல்
வாழ்க்கையை ஓட்ட தெரியாமல் தவிக்கிறார்கள்
தன்னைத் தானே, தனக்குள் என்ன நடக்கிறது
என்பதை அறிய கூட கணினிகள் தேவை
கையால் எழுதுவது குறைந்து போய்விடது
காதலிக்கு காதல் மடல் எழுதுவது கூட
இத்தனையேன், கணவன் மனைவி இருவரும்
வெளியில் உழைப்பதால் குடும்பத்திற்கே
சமைக்க நேரமில்லை, இவர்கள் இருப்பது
கூட்டுக்குடுபத்தில் அல்ல, ஆகவே இவர்கள்
தேடிப்போவது வயிற்றுக்கு 'வேக உணவு',
இவர்கள் நடத்தும் வாழ்க்கை 'வேக வாழ்க்கை'
குழந்தைக்கும் பெற்றோர்க்கும் இடையே
சீரான தொடர்பு இல்லை....... பிரச்சனைகள்

என் வீட்டில் என் அறையில் மூலையில்
என் முப்பாட்டனாரின் நூக்க மர
புத்தக அலமாரி ....அதில் விலைமதிப்பில்லா
பழைய புத்தகங்கள்....இப்போது படிப்பார் இன்றி
அனாதையாய் கிடக்க....... நானும் என் பிள்ளைகளைப்போல
என் தொடைக்கு கணினியுடன் ......
என் மேசையில் ஒரு மூலையில் சில 'சி டி' கள்
என்னைப்பார்த்து ஏளனமாய் சிரித்தனவோ!
அப்படித்தான் தோன்றியது....... ஆம் இப்போது
வரும் தொடை கணினிகளில் 'சி.டி' போடா முடியாது
'பென்-டிரைவ்' எல்லாம் பார்த்துக்கொள்கிறதே!
இந்த நிலையில் புத்தகம் யார் படிக்கிறார்கள்
எல்லாம் 'பென்-டிரைவ்'இல் ........ எப்போது வேண்டுமோ
போட்டு படிக்கலாம் ...........
என் புத்தக அலமாரியிலிருந்து ஒரு பழைய
புத்தகம் கீழே விழ...... அதை எடுத்துக் பார்த்தேன்
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' அதைப் படித்து
என் தந்தை புத்தகத்தின் ஓரத்தில் தன கையால்
பென்சிலில் எழுதிய குறிப்புக்கள்.....நோற்பது வருடங்கள்
கழித்து இப்போது படிக்க என்னை ஆழ்ந்த சிந்தனையில்
கூட்டிச்சென்றது............என் தந்தைக்கு என்ன ஈடுபாடு இந்த
புத்தகத்துடன் ......எனக்கு இல்லையே .......
கணினியில் இது செய்வது ...... கையால் குறிப்பு எழுதுவது
............தந்தையின் குறிப்பு சரித்திர ஏடு..... அதில் அவர்
பொன்னியின் செல்வன் சென்ற தமிழக இடங்கள்
அவற்றின் முக்கியத்துவம் இருக்கின்றதே!

என்ன கணினி யுகமாயினும் புத்தகம்
வாங்க வேண்டும் ஈடுபாடோடு படித்திடல் வேண்டும் !
இன்று பல தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன
காரணம் ....கார்டு, கவர் வாங்குவார் இல்லையாம்
கையில் பேனாவால் எழுதுபவர்கள் இல்லை !
எல்லாம் கைப்பேசி, எஸ்,எம்.எஸ் தொடர்புகள்...! காதல் கூட!

எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த அவசர உலகம்
தன்னை மறந்து...... தெரியலை, புரியலையே!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-May-19, 10:18 am)
Tanglish : avasara ulakam
பார்வை : 125

மேலே