ஏக்க பெருமூச்சுடன்

ஏக்க பெருமூச்சு

முழு வடிவாய் சூரியன்
பூமிக்குள் அமிழும் முன்
மறு புறத்தில்
முழு மதியின் முகம்
பார்க்க !

மேற்கில் சூரியனும்
கிழக்கில் முழு மதியும் !
மதியின் முக அழகில்
மனம் மயங்க !

சூரியன் !
தன் கொடுங்கதிர்களை
மென்மையாக்கி சுற்றுப்புறத்தை
மஞ்சளாக்கி கொஞ்சம்
கொஞ்சமாய் மதி நினைவில்
ஆழ்ந்து போனான் !

அவனழகை கண்டு
முழு மதியும்
கொஞ்சம் கொஞ்சமாய்
மேலெழும்பி எட்டி எட்டி
பார்த்தாலும்
ஆழத்தில் அமிழ்ந்து
போனவன் போனவன்தான் !

இப்படியே காலம் கால்மாய்
இருவருமே !
முகம் மட்டும் பார்த்து
விட்டு
காணாமல் போகிறோம் !

ஏக்க பெருமூச்சுடன்
சூரியனும்
முழு மதியும்
ஏக்க பெருமூச்சு

முழு வடிவாய் சூரியன்
பூமிக்குள் அமிழும் முன்
மறு புறத்தில்
முழு மதியின் முகம்
பார்க்க !

மேற்கில் சூரியனும்
கிழக்கில் முழு மதியும் !
மதியின் முக அழகில்
மனம் மயங்க !

சூரியன் !
தன் கொடுங்கதிர்களை
மென்மையாக்கி சுற்றுப்புறத்தை
மஞ்சளாக்கி கொஞ்சம்
கொஞ்சமாய் மதி நினைவில்
ஆழ்ந்து போனான் !

அவ்னழ்கை கண்டு
முழு மதியும்
கொஞ்சம் கொஞ்சமாய்
மேலெழும்பி எட்டி எட்டி
பார்த்தாலும்
ஆழத்தில் அமிழ்ந்து
போனவன் போனவன்தான் !

இப்படியே காலம் கால்மாய்
இருவருமே !
முகம் மட்டும் பார்த்து
விட்டு
காணாமல் போகிறோம் !

ஏக்க பெருமூச்சுடன்
சூரியனும்
முழு மதியும்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (8-May-19, 12:27 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 67

மேலே