காதல்

பருவ மழையோ பெய்யவில்லை
நீரின்றி நதியோ வற்றியது
தன்னையே நாடி வாடும் கடலை
சேர்வதெப்படி நீரில்லாமல் …………
நீரின்றி கண்ணீரில் நதி

கடலில் நீர் என்றும் வற்றுவதில்லை
ஆனால் அதன் நெஞ்சமெல்லாம்
இன்னும் தன்னை வந்து சேரா நதியை நாடி
இன்னும் உப்பானது கடல் நீர்

கடலாய் காதலன் அவன்
நதியாய் l அவன் காதலி அவனைச்சேர
அவள் பாதையில்தான் இன்னல்கள் எத்தனை
நீரற்ற நதிபோல்
இவர்கள் சேர்வது எப்படி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-May-19, 8:57 pm)
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே