எண்ணியதில் எழுந்தவை
நாட்டில் நடமாடும்
நாயுண்டு நரியுண்டு
நண்டுண்டு வண்டுண்டு
நடத்தைக் கெட்ட மாந்தருண்டு
தேனுண்டு மிளகுண்டு
தேவாமிர்த பழமுண்டு
திணையுண்டு மாவுண்டு
தேன்மதுரப் பாடலுண்டு
திசை தோறும் மனிதனுண்டு
வசை பாடும் மனமுண்டு
தித்திக்கும் வாழ்வுண்டு
திகட்டுகின்ற வாழ்க்கையும் உண்டு
கருக்குகின்ற கதிருண்டு
வளமான மண்ணுண்டு
செழிக்க வைக்கும் முகிலுண்டு
சிந்தையை தெளிவாக்க நூலுமுண்டு
கற்றறிந்த அறிவைக் கொண்டு
கைக்கொள்ளும் செயலைக் கொண்டு
கணக்காய் நீ வாழ்க்கைக் கொண்டால்
கடவுளின் ஆசியும் உண்டு.
- - - நன்னாடன்