என்னுடன் கவிதையாய்
பொதிகையில் பிறந்தாய் புலவன்பொய் யில்வளர்ந்தாய்
பூக்களில் தென்றலாய் புன்னகையில் அவளாய்
விழிஅசைவில் காதலாய் இதழ்ச்சிவப்பில் செந்தமிழாய்
என்னுடன் கவிதையாய் வாழும் தமிழே !
-----நிலைமண்டில ஆசிரியப்பா
பொதிகையில் நீபிறந்தாய் பொய்ப்புலவன் கைமொழியாய்
பூக்களில் தென்றலாய் புன்னகையி லேஅவளாய்
கண்ணசைவில் காதலாய் மெல்லிதழில் செந்தமிழாய்
என்னுடன் நீகவிதை யாய் !
-----இன்னிசை வெண்பாவாக