கடவுளுக்கு சம்பளம்.
வாழ்வில் சுகம் கண்ட போதும்
முடிவில் மடிந்து போகும் - மனிதனை
ஏன் படைத்தாய் இறைவா?
இறைஞ்சுகிறேன் இனி படைக்காதிருக்க
முடியுமா இறைவா? முடியாது - ஏன்?
படைப்பது - காப்பது - அழிப்பது
உன் தொழில் - சம்பளம்
யார் தருகிறார் உன் உழைப்பிற்கு?
படைத்தால் முழுமையாக இன்பம்
அன்றேல் முழுமையாக துன்பம் -
முடியுமா இறைவா? - முன்னது
என்றால் சம்பளத்தோடு
உனக்கு கிம்பளமும் வரும் -
மக்களின் பைகளில் இருந்து.