பறவையின் குணங்கள்
பறவையின் குணங்கள்
காதலுக்கும் உண்டோ!
கூண்டை விட்டு
பறந்தோடி போவதைப்போல்!
இல்லை...இல்லை...
அது எந்நாளும் ஏற்பதில்லை...
இல்லை...இல்லை...
அது பொய்யென்று மறுப்பதில்லை...
பிறவி பலனாய்
நெஞ்சிற்குள் முளைத்துவிடும்!
காதல் நதியாய்
கண்ணிற்குள் பெருகிவிடும்!!
தினம் உன்னைப் பார்க்க
வரும்போது எந்தன் மனப்பூட்டை திறந்துவைப்பேன்
உன்னுயிரும் என்னுள்
தலைசாய்த்துக் கொள்ள தலைநானும் வருடிவிடுவேன்
இரவினில் வருகின்ற பிறையை-நாம்
என்றும் சிறைபிடிக்க முடியாதடி
அதுபோல இணைகின்ற காதல்களும்கூட
மணம் தாண்டி நிலைக்காதடி
முறையா?..பிழையா?...
ஏதென்று தெரியவில்லை
கடல்மேலே பூக்கள் முளைத்தாலும்கூட
அலையென்றும் ஓய்ந்திடுமா?
இரவினில் வெளிச்சம் இருந்தாலும்கூட
பகலில் விண்மீன் வருமா?
இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்றும்
உன்னோடுதான் அன்பியே!
தனியாக இறந்தாலும் உடல்மண்ணில்
உயிரை உன்கண்ணில் புதைவேனடி!!