இலங்கையில் இன வாதமும் குண்டு வெடிப்பும்

இலங்கையில் நடக்கும் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம் மத போதையும், இன வாதமும், அரசியல்வாதிகளின் அறியாமையும், கடமையைச் சரிவரச் செய்யாததும், அரசியல் கட்சிகளின் பூசலுமே என்பது பலருக்குத் தெரியும். பாதிக்கப் படுபவர்கள் அப்பாவி மக்கள் .யூ டியூபில் பலர் தமது அறிவுக்கு எட்டிய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். சில ஊடகங்கள் எரியும் நெருப்பில் எண்ணை வார்த்து பணம் சம்பாகிக்கிறார்கள் .சில அரசியல்வாதிகள் தமக்கும் குண்டு வெடிப்புக்கும் தொடர்பில்லை என்று வாய் கிழியச் சொல்லுகிறார்கள் அமைதியையும் சாந்தத்தையும், மனிதத்தையும் போதித்த பௌத்தர்கள் அதிகம் வாழும் அழகிய தீவைக் கண்ணீர் வடிக்கும் தீவாக்கியது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின் அரசின் இன மத ஊழல் நிறைந்த கொள்கைகளா? தீவு குரங்கு கை பூமாலை ஆகிவிட்டது .அரசின் கொள்கையில் எல்லா இனங்களையும் மதிக்கும் மாற்றம் அவசியம் வேண்டும். ஒரு இனத்தில் பிறப்பது அந்த உயிர் செய்த கர்மாவைப் பொறுத்தது. மறு பிறவி பாதிக்கப் பட்ட இனத்தில் அந்த உயர் பிறக்கலாம்.

ஐந்து ஈஸ்வரங்கள் பௌத்தம் இலங்கைக்கு வர பல ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்பதை தெரிந்தும் ஏன் இந்துமதமே இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர் நாகரின் மதம் என்ற பல நூல்களின் ஓலைகளில், கல் வெட்டுகளில் உள்ளதை சிங்கள அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை ? அப்படித் தெரிந்திருந்தால் மத வாதம் பேசும் சிங்களவர் இந்து குருக்களை 1958 இனக் கலவரத்தில் கொலை செயதிருப்பார்களா .பல விலை மதிக்க முடியாத மத நூல்கள் இருந்த யாழ்ப்பாண நூல் நிலையத்தை எரித்திருப்பார்களா? பல கலவரங்களில தமிழ்ர்களையும் முஸ்லீம்களையும் குறி வைத்திருப்பார்களா ?. அதனால் உருவாகியதே விடுதலை புலிகளின் இயக்கம் . பணக்கார கொழும்பு 7 வர்க்கத்தால் ஜே வி பி யின் இரு புரட்சிகள் தோன்றின அதன் பின் தோன்றியுள்ளது தற்போது ISIS என்ற இயக்கம் .இலங்கையின் வளரும் பொருளாதாரம் தாங்குமா? இன்னும் அது அவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டுகிறது தேசப் பற்றை அல்ல . ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்லி மன திருப்தியடைவது அரசியல் வாதிகளின் (EGOISM) தற்பேருமைக்கு எடுத்துக் காட்டு . பாதிக்கப் படுபவர்கள் தீவு மக்கள்;
பி கு ( இது என் கருத்து)

எழுதியவர் : Pon Kulendiren (13-May-19, 5:18 am)
பார்வை : 190

மேலே