ரேனுஸ்ரீ-பகுதி 9

ஒரு நாள் காலை திடீர் என என்னால் நடக்க முடியவில்லை,உள்ளங்கையும்,உள்ளங்காலும் ஐஸ் போல இருந்தது,என் நிலையை கண்டு என் பெற்றோரும்,அண்ணனும் பதறி போயின,என் உடலில் வெப்பத்தை ஏற்றுவதற்காக ஏன் தந்தையும்,அண்ணனும் உள்ளங்கையிலும்,காலிலும் தைலத்தை சூடு பறக்க தடவி கொண்டிருந்தனர்,என் அம்மா எனக்கு உணவு அளித்தபடி இருந்தார்.பிறகு எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் என் கால்களை தரையில் ஊன கூட முடியவில்லை,கால்களில் சக்தி இல்லாதது போல உணர்ந்தேன். பதறி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
என் நிலையை கண்ட மருத்துவர் என் பெற்றோரிடம் இது வைட்டமின்,கால்சியம் குறைபாடாக இருக்கலாம் என்று கூறி எனக்கு ட்ரிப்ஸ் அளித்தார்.

என் பெற்றோர் மருத்துவரிடம் சரி ஆகிவிடுமா என்று கவலையுடன் கேட்டுக்கொண்டிருந்தனர் அதற்க்கு அவர் சரியாகிவிடும் என்று கூறிக்கொண்டிருந்தார்.

திடீர் என எனக்குள் பயம் வந்தது,ஒரு வேலை என்னால் நடக்க முடியாமல் போய்விட்டாள் என்ன செய்வது என்று நினைத்து பயந்தேன்,ஒரு வேலை அப்படி ஆகி விட்டால் என்னால் இனி பள்ளிக்கு செல்ல முடியாது,ஸ்ரீயை காண முடியாது என்று நினைத்து வருந்தினேன்,அப்போது தான் தெரிந்தது நான் ஸ்ரீயை எவ்வளவு நேசிக்கிறேன்,அவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன் என்று.
என்னை நினைத்து துடித்து கொண்டிருக்கும் என் பெற்றோரை பற்றி நான் யோசிக்கவே இல்லை.
என் பெற்றோரை விட,அண்ணனை விட யாரோ ஒருவன் எனக்கு முக்கியமாகி விட்டான் என்று நினைத்து வருந்தினேன்.

போதும்,நமக்கு ஸ்ரீ பைத்தியம் பிடித்து விட்டது,அவனுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,இனி அவனை பார்க்க கூட கூடாது என்று நினைத்தேன்.
சிறிது நேரத்திற்கு பிறகு என்னால் நடக்க முடிந்தது,நான் நடப்பதை கண்டு என் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

மறுநாள் காலை சரியாக ப்ரேயர் ஆரம்பிக்கும் சமயத்தில் பள்ளிக்கு சென்றேன்,ப்ரேயரின் போது ஸ்ரீயை பார்க்க கூடாது என்று உறுதியாக இருந்தேன் ஆனால் என் மனம் ஸ்ரீயை பார்க்க துடித்தது..
மதியோ மறுத்தது,மனமோ துடித்தது
என்ன செய்வது என்று புரியாமல் தவித்தேன்.
இறுதியில் மனம் வென்றது,சரி இறுதியாக ஸ்ரீயை ஒரே ஒரு முறை நன்றாக பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து ஸ்ரீயின் வகுப்பினர் நிற்க்கும் வரிசையை பார்த்தேன்,ஸ்ரீயை வரிசையில் எங்கும் காணமுடியவில்லை.
ஸ்ரீ பள்ளிக்கு வரவில்லையோ என்று யோசித்தபடி பிரேயர் முடிந்து வகுப்பிற்கு சென்றேன்.
அன்று மதியம் பானு என்னிடம் நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று விசாரித்தால்.
உடல்நிலை சரி இல்லாததால் வர இயலவில்லை என்று கூறினேன்.
பிறகு,நான் நேற்று ஏன் வரவில்லை என்று ஸ்ரீ கேட்டதாக கூறினால்.
"அது சரி ஸ்ரீ அவரு எதுக்காக இன்னைக்கு ஸ்கூலுக்கு வரல?அவருக்கு என்ன ஆச்சு?"என்று கேட்டேன்.
ஆமாவா?,அவரு வரலன்றதே நீ சொல்லிதா தெரியுது என்றால்.
இருவரும் சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தபடி இருந்தோம்.
பொதுவா ஸ்ரீ அண்ணா ஸ்கூலுக்கு லீவ் போட மாட்டாரு,லாஸ்ட் இயர் FULL அட்டெண்டன்ஸ் காகவு,மார்க் காகவு அந்த அண்ணாக்கு ப்ரைஸ் கூட குடுத்தாங்க என்றால்.
என்ன...?FULL அட்டெண்டன்ஸ்,FULL மார்க் கா அதெல்லா நம்ப செஞ்சதே இல்லையே.... என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.
நாளைக்கு வந்துருவாரு என்று கூறி புன்னகித்தால் பானு.

மறுநாள் ஸ்ரீயை பார்க்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமாக பள்ளிக்கு சென்று ஸ்ரீயை எதிர் நோக்கிக்கொண்டிருந்தேன் ஆனால் ஸ்ரீ அன்றும் பள்ளிக்கு வரவில்லை.
ஒரு வேலை இனி அவனை பார்க்க கூடாது என்று நினைத்ததாலோ என்னவோ அவனை பார்க்கவே முடியவில்லை,இன்றோடு அவனை பார்த்து மூன்று நாட்கள் ஆகிறது என்று நினைத்து வருந்தி கொண்டிருந்தேன்.

எங்கள் ஆசிரியர் அமைதியாக படிக்க கூறி விட்டு வகுப்பை விட்டு வெளியே சென்றிருந்தார்.
ஸ்ரீ நாளையாவது பள்ளிக்கு வருவானா,அவனுக்கு என்னவானது என்று யோசித்தபடி இருந்தேன்.
என் மனதை புரிந்துகொண்ட பானு என்னை பார்த்து"ஸ்ரீ அண்ணாக்கு உடம்பு சரி இல்லையா,அதனாலதா ஸ்கூலுக்கு வரல"என்று கூறினால்.
ரொம்ப உடம்பு சரி இல்லையா?என்று கவலையுடன் கேட்டேன்.
அப்படித்தா நினைக்கிற,இல்லனா ஸ்கூலுக்கு வராம இருக்க மாட்டாரு,ரெண்டு நாளா டியூஷன்னுக்கு கூட வரல என்றால்,பிறகு என் கைகளை பிடித்து நாளைக்கு கண்டிப்பா வந்துடுவார் என்று கூறி புன்னகைத்தால்.

இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தார்,பிறகு படிக்க கூறி விட்டு சென்ற பாடத்தில் இருந்து கேள்வி கேட்டார்.
வகுப்பில் இருந்த யாரும் பதில் அளிக்காத காரணத்தினால் ஆசிரியர் அனைவரையும் குச்சியால் அடிக்க தொடங்கினார்,என்னை அடிக்க வரும் போது என் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டேன் ஆனால் எனக்கு அடி விழவில்லை என்னவானது என்று கண்களை திறந்து பார்த்தேன் ஆசிரியர் என்னை பார்த்து விட்டு என்னை அடிக்காமல் அடுத்த மாணவியை அடிக்க தொடங்கினார்.
அதை கண்ட மற்ற மாணவர்கள் என்னை அடித்தே ஆக வேண்டும் என கூறினார்கள்,பின்பு குச்சிக்கே வலிக்காதது போல என்னை அடித்தார் ஆசிரியர்.
பிறகு என் நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் என்னை மட்டும் ஏன் அடிக்க வில்லை என்று என்னிடம் கேட்டனர்,அதற்க்கு என்னிடம் பதில் இல்லை ஏனெனில் காரணம் என்னவென்று எனக்கே தெரியாது.

மறுநாள் காலை ஸ்ரீயின் வகுப்பை பார்த்த படி ஸ்ரீ இன்றாவது வருவானா என்று நினைத்து கொண்டே என் வகுப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன் அப்போது யார் மீதோ மோத இருப்பது போல உணர்த்து தலையை திருப்பி பார்த்தேன்,என் எதிரே ஸ்ரீ.
அவனை எங்கள் வகுப்பறைக்கு வெளியே சிறிதளவும் நான் எதிர் பார்க்கவில்லை,அதன் காரணமாக ஸ்ரீ என் கண் முன் நிற்பதை நம்ப முடியாமல் ஸ்ரீயின் வகுப்பறையை பார்த்து விட்டு மீண்டும் ஸ்ரீயை அதிர்ச்சியாக பார்த்தேன்.
என் நிலையை கண்ட ஸ்ரீ என்னை பார்த்து வேடிக்கையாக புன்னகித்து விட்டு அங்கிருந்து சென்றான்.

பானு வகுப்பின் நுழைவாயிலில் நின்று என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தால்,நான் செல்லமாக கோவித்து கொண்ட படி அவளை பார்த்து முறைத்தேன்.
பிறகு அவள் சிரித்து விட்டு"உங்க ரெண்டு பேரையு பார்த்தா எனக்கு வேடிக்கையா இருக்கு,நீ என்னனா ஸ்ரீ அண்ணா வந்துட்டாரான்னு அவரோட கிளாஸ் ரூம்ம பாத்துகிட்டே வர,அவரு என்னனா ஸ்கூலுக்கு வந்த வொடன நீ வந்துட்டியானு கேட்டு ஓடி வராரு"என்று கூறி புன்னகித்தால்.
பிறகு முகத்தை தீவிரமாக வைத்த படி என்னை பார்த்து"உனக்கு தெரியுமா உனக்கு உடம்பு சரி இல்லாம போன அன்னைக்கு ஸ்ரீ அண்ணாக்கு fever இருந்து இருக்கு,fever ரோட ஸ்கூலுக்கு வந்து இருக்காரு,அந்த நிலைமையிலு உன்ன பத்தி என்கிட்ட விசாரிச்சுட்டு இருந்தாரு,அன்னைக்கு இவினிங்கே fever அதிகமாயிட்டு இருக்கு அதா அன்னைக்கு இவினிங் டியூஷனுக்கு கூட வரல,நேத்து ஸ்ரீ அண்ணாவோட அம்மா சொன்ன பிறகுதா எனக்கே தெரியு.
அந்த அண்ணாவ எனக்கு ரொம்ப வருஷமா தெரியு,அந்த அண்ணா எப்பவோ ஸ்கூலு,வீடு,படிப்பு,கிரிக்கெட்டுன்னு தா இருப்பாரு இது வரைக்கு அந்த அண்ணா எந்த ஒரு பொண்ண பத்தியு பேசி நா கேட்டதே இல்ல,அதே மாரி எந்த ஒரு பொண்ணுக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ்( importance ) குடுத்து நா பார்த்ததே இல்ல,என் கிட்ட கூட அதிகமா பேசமாட்டாரு,அப்படியே பேசுனாலு நல்லா படிக்க சொல்லி சொல்லுவாரு.
ஆனா உன்ன பாத்ததுல இருந்து உன்ன பத்தி நிறைய பேசுவாரு,நிறைய கேப்பாரு,ஆனா எதையு உன்கிட்ட சொல்ல வேண்டான்னு சொல்லிடுவாரு என்று கூறி புன்னகித்தால்.

அவள் கூறியதை கேட்ட பிறகு,என் பெற்றோரை தவிர வேறு ஒருவன் என்னை இவ்வளவு நேசிப்பதை நினைத்து மிக அதிஷ்டசாலியாக உணர்தேன்.

அன்று மதிய இடைவேளையின் போது ஸ்ரீயும் அவனுடைய இரு நண்பர்களும் வகுப்பிற்கு வெளியே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் தனி தனியே அமர்ந்திருப்பதை கண்டேன்,
ஸ்ரீ கவலையுடன் இருப்பது போல தெரிந்தது.
மாலை பள்ளி முடிந்து வகுப்பை விட்டு வெளியே வந்த போது ஸ்ரீயின் நெருங்கிய நண்பன் ஸ்ரீயின் கையை உதறி விட்டு கோவமாக சென்றான்,அவன் பெயரை அழைத்த படி ஸ்ரீ அவன் பின் ஓடினான்.நண்பர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை என்று புரிந்தது.

தொடரும்,,,,

எழுதியவர் : அனுரஞ்சனி (18-May-19, 4:15 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 136

மேலே