கவிதை எழுதிய காதல் மடல்

யார் எழுதிய வார்த்தைகளோ
நான் வந்து சேர்ந்துகொண்டேன்

நான் உன்னை வந்தடைய
பல தபால் பெட்டிகளையும்
சில குப்பைத்தொட்டிகளையும்
பார்த்திருக்கிறேன்
சற்று நேரம் வானம் அழுததில்
நான் நனைந்தும் இருக்கிறேன்
இருந்தும் உன்னை காண்பதில் மகிழ்ச்சி

நீ என்னை கிழித்தெறிவதற்கு முன்
என் முகத்தை ஒரு முறை பார்
அதில் நிறைந்திருக்கும் உணர்வுகளையும் பார்
பிழை இருந்தால் அதை மன்னித்தும் பார்
என்னை யார் உன்னிடம் தந்ததென்று பார்
அவனோ அவளோ
அவரவரின் மனதை பார்
என்னை மட்டுமே இருவர்கிடையில்
பாலமாய் கருதி உன்னிடம் நீட்டியவரை பார்
உன்னிடம் நேரமிருந்தால் மறுபடியும் என்னை திரும்பி பார்
முடிந்தால் புரிந்தும் பார்
என்னை நம்பி காதல் புரிந்தவருக்கு
நான் எழுதிய காதல் மடல்!!!


இப்படிக்கு,
மொழியை புகழ்விக்கும்,
கவிதை .....

எழுதியவர் : மணிகண்டன் (19-May-19, 9:06 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
பார்வை : 442

மேலே