காதல்

கருங்கல்லில் செதுக்கிய சிலையோ இவள்
என்பது போல் மூக்கும் முழியுமாய்
அழகாய் இருக்கின்றாள் கருத்த இவள்
உயிர்க்கொண்ட கற்சிலையாய் கோயிலில்
குடிகொண்ட அந்த அந்த அம்மன் போலவே
கருத்த அவள் மூக்கில் கெம்பு மூக்குத்தி
கருப்பும் சிவப்பும் ஒட்டி உறவாட
அவள் பிறை நுதலில் சிவப்பு குங்குமப்
பொட்டு மூக்குத்தி கெம்போடு உறவு தேட
கருத்தாயி அழகில் மதி மயங்கி நான்
அவள் காதலுக்கு ஏங்கி நின்றேன்
கறுப்பே என்றும் நீ அழகே என்று பாடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-19, 9:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 150

மேலே