நிராகரிப்பு
நீந்திக்கொண்டிருந்த
மீன் நிலத்தில் துள்ளிவிழுந்து
துடிப்பதுபோல் துயரொன்று,
இந்த நிராகரிப்பின்
நிஜம் யாதோ தெரியவில்லை
வலியின் பிரதியெடுக்க
வார்த்தைக்கு வழியில்லை,
அதை வரைய முனைந்தாலும்
வடிவமேதும் கிட்டவில்லை
வழியும் விழி நீரில்
கரிப்பையுணரும்போது
நிராகரிப்பின்
சுவையை அறிகிறேன்,
நகம் களைவது போல்
கேசம் உதிர்வதுபோல்
செருப்பை உதறுவதுபோல்
வியர்வையை வழிப்பதுபோல்
அனிச்சை செயலாய்
ஆகிவிட்டது அவர்களுக்கு,
ஆனாலும் ,
தளராத நம்பிக்கையில்