ரகசியம் ஆனால் பொய்

பல்விளக்கி பல்விளக்கி நித்தம் மனிதனைஅப்
பல்விலக்கி போனதோர் நாள்

ஆயுர்வே தாயிலைத் தேய்த்தும் சிகைகொட்ட
சொட்டை கிடைத்த வரம்

தொலைக்காட் சிமைக்கன்கேட் டான்புன் னகைரகஸ்யம்
கையில்பல் செட்காட் டினார் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-May-19, 9:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே