கண்ணீர் துளிகள்
கண்ணீர் துளிகள்😥
காலையில் கதிரவன் வரவுக்கு முன் இலைகளில் உறங்கும் பனி துளிகள் அல்ல
நான் சொல்ல போவது மானுடத்தின் சில கண்ணீர் துளிகள்.
கடற்கரை மணல் பரப்பில்
இன்பமாக உட்கார்ந்து
பனிக்கூழை ரசித்து, ருசித்து, சாப்பிடும் அந்த பணக்கார குழந்தை.
வயற்றை கழுவ சுண்டல் விற்று பிழைக்கும்
ஏழை பிஞ்சு
ஏக்க பார்வையுடன்
வாயில் எச்சு ஊர
குளிர்கனியை சுவைக்க இயலவில்லையே என்ற
ஏமாற்றத்துடன்
சிறுவன் நேத்திரத்தில் நீர் துளிகள்.
குடிகார கணவன் அடித்து துவைத்து
உளறியபடி உறங்கிவிட்டான்
மிச்சம் மீதி இருந்த சாப்பாட்டை
தன் பிள்ளைக்கு ஊட்டிவிட்டு
வயிற்றில் ஈர துணி போட்டு ஒருகளித்து அவள் படுத்துறங்குமுன் அவள் விழியோரம்
அவளை அறியாமல்
கண்ணீர் துளிகள் .
ஒரு தலையாய் காதலித்தாலும்
தன் காதலி நிறந்திர ஊர் மாற்றம் ஆகும் போது
அவளை வழி அனுப்ப
வந்த கூட்டத்தில் அவளுக்கு தெரியாமல் அவன்.
அவள் நிறந்திர பிரிவை என்னி கனத்த இதயத்துடன்
அவன் கண்களில் ஏனோ கண்ணீர் துளிகள்.
-பாலு.