அஞ்சலி

அஞ்சலி

"எல்லா தமிழர்களும் புலியா?
இல்லை உரிமை கேட்டு போராடுவது புலிகள் மட்டுமா?" என்று
அங்கலாய்த்து கொண்டு உலகம் இருக்கையில்;
தமிழ் இனப்படுகொலை!
புலி மட்டும் அழிந்து
பத்து வருடங்கள் ஆகவில்லை
தமிழச்சியின் தமிழ் உணர்வு
அர்த்தமற்று வாழ்ந்து வருடங்கள் பத்தாக ;
தங்கிலீஷில் பேசினும்
நாளைய சந்ததியின் சிந்தனைகள்
முப்பது வருட கால உரிமைப்போரில்
கத்தியை தூங்கியதால்
நரிகளின் சூழ்ச்சியால்
எம் தமிழர் இரத்தம் ஆறாக ஓட
பிந்தி கற்ற பாடங்கள்
மனதில் வேரூன்றி நிற்க;
இதழ்கள் மௌனமாக
தெவிட்டா தமிழ் கேட்டு
மறைந்த ஈழக் குழந்தைக்கு
அஞ்சலி செலுத்துகின்றது
ஓலமிடும் நெஞ்சம்.

~ நியதி ~

எழுதியவர் : நியதி (20-May-19, 6:22 pm)
Tanglish : anjali
பார்வை : 118

மேலே