காதல்

காத்திருக்கிறேன் உனக்காக எந்தன்
காதல் கனி ரசமே கமல முகக் கண்ணம்மா
உன்முகம் ஏன் என்னை இன்னும் ஏற்கவில்லை
கமலமே அந்த கமல இலையாய் நீரோடு
ஓட்டும் ஒட்டாது இருப்பதுபோல் எனைக்
கண்டும் காணாமல் நீ இருக்கின்றாய்
ஒருதரம் பார்வையை அன்பாய் என்மேல்
நீ செலுத்தினால் உன் காலடியில் ஏன்
காதலை சமர்ப்பிப்பேன் நான்.நீ ஏற்பாய்
என்ற தீரா ஆவலால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-May-19, 11:38 am)
Tanglish : kaadhal
பார்வை : 270

மேலே