குருவே சரணம்!
அம்மாயெனும் சொல்லை சொல்ல,
யாரும் கற்பிக்க தேவை இல்லை!
அதில் 'அ'னாதான் முதலெழுத்து- என்று சொல்ல,
குருவை தவிர வேரொருவர் இல்லை!
திருக்குறளும் அறியாதிருப்பேன்!
இந்த திருமாக்கள் என்னை திறுத்தவில்லை எனில்!
என் தந்தைக்கு நான் மட்டும்,
என் குருவுக்கோ தன் மாணாக்கள் எல்லாம்
தம் குழந்தை!
என் வாழ்க்கையை பற்றி என்னைவிட
அதிக பயம் இவர்களுக்கு!
இப்பேர்பட்ட என் குருமாக்களுக்கு
குருவே சரணம்!!!