வெந்து தணிந்தது மனது

வெந்து....... தணிந்தது....... மனது.......

உள்காற்று வெளிவந்திட்ட
முன்பற்கள் வெளித்தெரிந்திட்ட
"ஆ" வென்று வாய் திறந்திட்ட
ஒரு தமிழரின் இறந்த முகத்தில்
ஆயிரம் ஈக்கள் மொய்த்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......

நச்சுக்குண்டுகள் வீசியதில்
ஊரின் உள்ளே வெடித்ததில்
மூச்சுக்காற்றை அழித்ததில்
குடும்பம் குழந்தை ஊரென்று
தமிழர் உயிர்கள் பிரிந்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......

தருமம் செத்து அழிந்தது
இரண்டகம் இனத்தை அழித்தது
தன்னலம் அனைத்தையும் அழித்தது
ஒற்றுமை இல்லை ஆதலால்
தமிழரின் நாடு அழிந்தது
தமிழிழத்துயரத்தின் சுவடு அது
வெந்து....... தணிந்தது....... மனது.......

- சு.சுடலைமணி

எழுதியவர் : சு.சுடலைமணி (22-May-19, 11:22 am)
சேர்த்தது : yazhmani
பார்வை : 454

மேலே