தென்றலே

மலையில் பிறந்து மனையில் வந்தே
மலர்போல் நம்மைத் தீண்டிடும் தென்றல்,
கலைகள் பிறக்கக் காரண மான
காசினி போற்றும் பொதிகைத் தென்றல்...!

கம்பன் தொடங்கிக் கவிஞர் பலரும்
காவியம் படைக்கக் காரணத் தென்றல்,
அம்புலி பார்த்தே அணைத்திடும் காதலர்
அருகினில் சென்றே தழுவிடும் தென்றல்...!

நதியில் ஆடி கொடியில் சீவிய
நற்றமிழ்க் கண்ண தாசனின் தென்றல்,
பொதிகையில் பிறந்து புலவர் மன்றம்
பூமணம் நிரப்ப வந்ததே தென்றல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-May-19, 6:41 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thentralae
பார்வை : 67
மேலே