அற்புத சிருஷ்டி

ஜிஸிஇ எண்பத்தாறின்
அடையாளம்... இந்திய
டிஆர்டிஓவின் பெருமிதம்...
எப்போதும் இன்முகம்... அது
டாக்டர் லதாகிறிஸ்டி.. அவர்..
இறைவனின் அற்புத சிருஷ்டி...

அழகிய விஞ்ஞானி.. இவர்
செய்வார் ஆராய்ச்சி
அறிவியல் எல்லைகள் தாண்டி...
அதில் மானுடநலம் வேண்டி...

நிறைய புத்தகங்கள்
படித்திருக்கிறார்... கிறிஸ்டி..
இரண்டு புத்தகங்கள்
எழுதி இருக்கிறார்...
ஒன்றில் பாட்டுக்கொரு புலவர்
பாரதி தெரிகிறார்... அதில்...
ஆண் பெண் மகிழ்ந்து வாழ
சமநீதி சொல்கிறார்...
சிலுவை சுமக்கும்
காந்த வார்த்தைகளில்
சிறகுகள் தருகிறார்...

இன்னொன்றில் அறிவியலுக்கும்
அப்பால் ஆச்சரியம்
தேடுகிறார்... ஆகாயத்திற்கும்
அப்பால் அதிசயம் நாடுகிறார்....
படிப்பவர்க்கு நல்ல
சுவாரசியம் தருகிறார்...
பிரம்மாண்டம் படைக்கிறார்...

இவர் எழுத்துக்களும்
அழகாய் இருக்கிறது.. அது
நேர்த்தியாய் இருக்கிறது.. அவை..
வாழ்க்கைச் சாலைகளில்
மைல் கற்கள்..
வெற்றி எனும் ஊருக்கு
அழைத்துச் செல்லும்...
வழிகாட்டிப் பலகைகள்...

இவரது எழுத்துக்களில்...
ஆக்ரோஷ தருணங்களிலும்
அன்பின் ஆளுமை தெரியும்..
அக்னி சுவாலையிலும்
தென்றல் ஒன்று குளிர்
தந்துவிட்டுப் போகும்...

இவரது புத்தகங்கள்
பல நூற்றாண்டுகளுக்கு
இவரது இருப்பைச் சொல்லும்..
அதை.. சிறப்பாய்ச் சொல்லும்..

லதாகிறிஸ்டி... இவர்
கையில் மைக் பிடிக்கையில்...
மாணவர்களிளிடம் மாண்பாய்
உரை ஆற்றுகையில்...
தேனருவிக் குளிர் தென்றல்
சந்தனவனம் கடந்து
மலர்ப்பொய்கை நுழைந்து
பசும்புல்வெளி தவழ்ந்து...
வீசினாற் போன்று
செவிக்குணவு தேனாகும்...
கருத்துச்செறிவு களைகட்டும்...
வெற்றிக்கது வழிகாட்டும்...

கிறிஸ்டியின் செயல்களின்
நேர்த்தியில்.. அழகில்...
நந்தவனங்களும் பூவனங்களும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்
மேலும் தம்மை
மெருகேற்றிக் கொள்ள...

இயேசுநாதரிடம் இறையன்பு..
புதல்வர்கள் இருவரிடம்
ஈடில்லாத இதய அன்பு...
சமூகத்தின்பால் தனி அன்பு...
இனிமைக்கு இனிமை
சேர்ப்பது.. இவரது பண்பு...

லதா கிறிஸ்டிக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்...
இவர்... சாதித்ததை விடவும்
சாதிக்கப் போவது அதிகமாய்
இருக்கட்டும்.. அதில்
வசந்தங்கள் வரமாகட்டும்..
வானமும் வசப்படட்டும்..

லதா கிறிஸ்டி...
வளங்கள் எல்லாம் பெற்று
நீடூழி வாழ்க! நிலைத்த
புகழோடு வாழ்க!!
பல்லாண்டு வாழ்க!!!
பார்போற்றிட வாழ்க!!!!
👍👏💐🙋‍♂🍰😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-May-19, 5:09 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 336

மேலே