அவள் மனதை யார் அறிவார்

அவள் மனதை யார் அறிவார்.

அவளுக்கேன்று ஒரு மனமுண்டு
அதில் ஆசைகள் நிறைய உண்டு
வாழ்வாதாரத்தை என்னி அவள் தினம் ஓடினாலும்
தன் பிள்ளைக்காக ஓய்வில்லாமல் உழைத்தாலும்
தனிமரமான அவள் ஆசை அபிலாஷைகளை யார் அறிவார்
அவள் ஆழ் மனதின் சோகத்தை யார் அறிவார்
அவசர, சுயநல உலகில் அவளுக்கு ஆறுதல் சொல்லுவது யார்
சென்றவனை என்னி எத்தனை நாள் உருகுவாள்
இன்னமும் இங்கே ஆணுக்கு ஒரு நியாயம்
பெண்ணுக்கு ஒரு நியாயம்
ஆண்டவன் படைப்பில் எல்லா இனமும் ஒன்று தான்
இதில் ஆண் என்ன பெண் என்ன
நியாயமான ஆசை நிறைவேறுவதில் தவறு என்ன
அவள் எடுத்த முடிவு அவசரத்தில் எடுத்து முடிவு அல்ல
ஆழ்ந்து யோசித்து எடுத்த முடிவு
அவள் மறுமணம் செய்வதில் என்ன தவறு
சமத்துவம் என்ற சொல்லுக்கு இது தானே அர்த்தம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (28-May-19, 12:27 pm)
சேர்த்தது : balu
பார்வை : 139

மேலே