ஐ லவ் யூ டா
ஐ லவ் யூ டா!!💃😘🌹
என் மனதை கொள்ளை
அடித்த ஆண்மகனே!😘
உன் அழகிய கவிதையால்
மயங்கி விட்டேன் உன்னிடம்.
உள்ளம் கவர்ந்த கள்வனே !
கோபியர் கொஞ்சம் கண்ணனே!
வள்ளி, தெய்வானை கொண்டாடும் அழகிய தமிழ் மகனே !
ஜனகன் மகள் சீதையின் ஸ்ரீராமனே!
மன்மதனின் அழகை அப்படியே
சுமந்த வந்த வசீகரமே!
மூவேந்தர் வழி வந்த சுத்தமான வீரனே!
கம்பனை முன்நிறுத்தி
இளங்கோவை ஆராய்ந்து
பாரதியை பின்பற்றி
பாரதிதாசனை உள்வாங்கி
தினம் தினம் தமிழ் விருந்து படைக்கும்
திறமைமிக்க கவிஞனே!
கன்னி நான் உம்மிடம் கவிழ்ந்து விட்டேன்.
காலமெல்லாம் உம் கரம் பிடித்து நடக்க ஆசைப்படுகிறேன்.
விரைவில் வந்து மீட்டுங்கள் வீனையாக வீற்றிருக்கும் என்னை.
சீக்கிரம் வந்து கவி பல எழுதுங்கள் எழுத படாத புத்தகமான என் மீது.
இக்கால மங்கையாக உங்களை நோக்கி வெட்கத்துடன் ரகசியமாக கூறுகிறேன்
ஐ, லவ் யூ டா!!
- பாலு.