ஒப்பனை

உன்னை விரும்பாத பெண்ணில்லை உலகில்
உன்னை ரசிக்காத ஆணுமில்லை உலகில்
உன்னால் இயங்காத துறையுமில்லை உலகில்
நீ இருக்காத திரையுமில்லை உலகில்

நீயோ அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறாய்
பல மனிதரின் மனக் குறை தீர்க்கிறாய்
பெண்களை உன் பக்கம் வைத்திருக்கப் பார்க்கிறாய்
ஆடவரின் கவனத்தை அதிகமாய் ஈர்க்கிறாய்

சரும நிறங்களையும் உன்னால் மாற்ற முடியும்
பலரின் வாழ்வு தினம் உன்னாலே விடியும்
உன்னால் வயதுக்கோ ஒரு எல்லையின்றி போனது
நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் ஆனது

உருவத்தில் யாரையும் உடனே கொண்டு வருகிறாய்
பாராட்டுகள் அவர்களால் நீயும் பெறுகிறாய்
மற்றவர் புகழ்கையில் மன நிறைவை தருகிறாய்
கலைத்து உன்னை களைகயில் நொடியில் மறைகிறாய்

விழிகளில் ஒரு மையை ஊற்றினாய்
உதட்டில் வண்ண சாயம் பூசினாய்
நகங்களில் நிறக் கோலம் தீட்டினாய்
முகத்தில் மேலும் பொலிவைக் கூட்டினாய்

பருக்கள் அதை மறைக்கப் பார்த்தாய்
சுருக்கம் அதை குறைக்கப் பார்த்தாய்
உருவம் அதை அச்சில் வார்த்தாய்
பொலிவு அதை மிகையாய் சேர்த்தாய்

நீ இல்லா திருமணங்கள் உண்டா இம்மண்ணில்
அளவில்லா ஆனந்தம் பெருகிடும் மணப்பெண்ணில்
இருந்தாளோ தேவதை இத்தனை நாள் அவ்விண்ணில்
என்றொரு கேள்வியும் எளாதோ என்னில் உன்னில்

ஆடையும் நீயின்றி முழுமை அடையாதோ ?
அலங்காரம் நீ சேர்ந்தால் முடிவே கிடையாதோ ?
ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவாயோ ?
அமிலம் தாக்கிய முகம் அதையும் தேற்றுவாயோ ?

நீயின்றி போனால் அழகை ரசிக்க மறப்பேனோ ?
உன்னை தீட்ட எந்தன் மனதை திறப்பேனோ ?!
ஒப்பனை இட்ட முகத்தோடு ஒரு நாள் இறப்பேனோ?!
மறு ஜென்மம் அதிலும் ஒப்பனையோடே பிறப்பேனோ?!

எழுதியவர் : ஸஹானா (29-May-19, 4:43 pm)
சேர்த்தது : Sahana
Tanglish : oppanai
பார்வை : 498

மேலே