நளாயினி

முதற்கேள்வி

இராமாயணத்துல தாம்பத்தியத்தை ஏகபதி/பத்னி விரதமா சொன்னவங்க .. மஹாபாரதத்துல .. பாஞ்சாலியை ஐவருடன் இணைத்து உறவுக்கதைப் பிறப்பித்தது ஏன் ..

.. ஆர்வமூட்டும் கதைதான் .. திரெளபதி யார்த் தெரியுமா ம்ம் ?? இது ரொம்ப நீண்டுபோகும் அதனால சுருக்கிச் சொல்லிடறேன் .. :/

வியாசர் .. துருபத மன்னனிடம் நளாயினியே
திரெளபதியாக ஜென்மமெடுத்து தங்களுக்குப் பிறக்கப் போகிறாள் என்றுச் சொல்லுகிறார் .. அவளின் ஜென்ம சாபல்யத்தையும் கதையில் சொல்கிறார் ..

யார் நளாயினி ..

பார்ப்பவர்களை ஈர்க்கும் பொன்னிற எழிலும் கண்களையும் உடைய நளாயினி .. அவள் வயதிற்கும் .. அழகிற்கும் சற்றும் பொறுத்தமே இல்லாத மெளத்கல்ய முனிவரை திருமணம் செய்யும் கட்டாயத்திற்கு சூழ்நிலையால் ஆளாகிறாள். அதற்கு தயாருமாகிறாள் ..

ஆனால் மெளத்கல்யரோ இயற்கையிலேயே சந்தேக குணம் உடையவர் என்பதால்.. இதை அவரால் ஏற்கவே முடியவில்லை .. அவலட்சணமாக இருக்கும் தன்னை மணம் கொள்ள .. இப்படியோர் அழகானப் பெண் எப்படி ஒப்புக் கொள்கிறாள். நிட்சயம் நளாயினி தன்னுடன் எப்போதுமே
மனமொத்து வாழ இயலாமலேயே போய்விடுவாள் எனும் தாழ்வுணர்ச்சியை தனக்குள் நிலைநாட்டுகிறார் ..

இதன்படியாக நளாயினியை சோதித்து அதில் அவள் வெற்றிக் கொண்டாலே அவளுடன் இல்லறவாழ்வில் இணைவது என்று
முடிவுக் கொள்கிறார் ..

அவருடைய தவ வலிமையால் பெற்ற சக்தியை வைத்து தன்னை ஒரு முதியவன் போல வேஷம் மாற்றி .. முதலிரவு அறையில்
படுத்துக் கொள்கிறார் ..

இளமைக்கே உரிய கனவுகளுடன் மகிழ்னன் இருக்கும் அறைக்குள் நுழைகிறாள் நளாயினி. கற்பிற்கு மகுடம் சூட்டப்பாட்ட காலகட்டத்தில் .. தன் கணவன் ஒரு முதுனன் என்று அறிந்த நளாயினி .. அவள் இளமையின் தினவை வேறு எங்குத் தீர்த்துக் கொள்ள முடியும் ..

அவரைப் பற்றி கேட்டறிந்தவை
முற்றிலுமாக வேறுபட்டிருப்பதையும்
கடந்து சற்றும் சஞ்சலமுறாமல்
வியர்த்த கிழட்டு மேனியை
அவள் முந்தானையால் விசிரி
விடுகிறாள் ..

தன்னுடலில் சில்லென்றக்
காற்றுப் படர்வதை உணர்ந்த
மெளத்கல்யர் ..
இருமியபடியே எழும்பி
அவளைத் தன் இடுக்கிய
விழுகளால் பார்த்துவிட்டு
முகம் சுழிக்கிறார் ..
உன்னை எனக்குச்
சற்றும் பிடிக்கவில்லை என்கிறார்
உன்னை என்று எனக்குப்
பிடிக்கிறதோ அன்றே
உனக்கும் எனக்கும் தாம்பத்யம்
என்கிறார் ..

அதற்குமுன் நம்மிடையே
எந்த ஒரு தாம்பத்யமும் வேண்டாமென
போ என்று அவளை தன்
கால்களால் உதைத்துவிடுகிறார் அவர்..

கால அறத்திற்கேற்ப
கணவனே கண்கண்ட தெய்வம் என அனைத்தையும் அடக்கி அவருக்கு சேவை செய்து வாழ்ந்தாள் ..

அவள் சேவைகளை எப்படியாவது குறை கூறவேண்டுமென்றே சிரமித்து அவளை
துன்புறுத்தியும் வந்தார் .

தன் தவ வலிமையால் தனக்கு தொழுநோயைப் பரப்பி .. உடலிலிருந்து
சீழ்க்கசியும் படி செய்து அவளை சோதிக்கிறார் ... அவள் அதைக் கொஞ்சம் கூட அருவருக்காமல் .. அவர் உடல் கசியும் நீரை
துடைத்து வாசனை திரவியங்களை அவரின் உடல் மேல் தழுவி .. நுற்நாற்றம் இல்லாமல்
பார்த்துக் கொள்கிறாள்

கட்...

அவளின் இத்தனைப் பொறுமையைக் கண்ட
மெளத்கல்யருக்கு அவள் மேல் அன்பு தோன்றுவதற்கு பதில் .. சந்தேகமே அதிகம் கூடியது.. எப்பெண்ணும் தாம்பத்ய சுகத்தையே அனுபவிக்காமல் சதா பதி சேவையே கதி என்று வாழுதல் சாத்யமா என்பதே அவருடைய எண்ணம் ..எனவே மேலும் சோதிக்கலாமே தீர்மானிக்கிறார்

கட் ..

எப்போதும் அவர் சாப்பிட்டு மீதம் வைக்கும் எச்சிலையே அவள் உண்பது வழக்கம்
அன்று.. அவர் சாப்பிட்டு வைத்த எச்சிலில்
தொழுநோயால் பாதிக்கப்பட்டு விண்டு விழுந்த அவர் கை விரல் ஒன்று அவர் மீதம் வைத்த அடிசிலை நளாயினி உண்ணும்போது
காண்கிறாள் .. அதைக் காணும் அவளின் உணர்வு என்னவாய் இருக்கும் என உறங்குவது போல பாசாங்கில் இருந்த மெளத்கல்யர் ஒளிந்து காண்கிறார் .. ஆனால் நளாயினியோ ..சற்றும் முகம் சுழிக்காமல்
அவ்விரலை ஒரு ஒர்ரமாக எடுத்து வைத்துவிட்டு .. சஞ்சலம் மொள்ளாமலேயே சாப்பிடுவதைப் பார்த்த அவர் .. அட என்ன இது எப்படி சோதித்தாலும் .. இப்படி பொறுமையாய் இருக்கிறாளே என்று அதிகோபம் கொண்டவர்
அவளைப் பார்த்து எட்டி உதைத்தார்..

"எனக்குக் காமம் பெருக்கெடுத்துத் தவிக்கச் செய்கிறது .. ஆனால் உன்னைப் பார்த்தால்
எனக்கு அந்த ஆர்வம் அடங்கி குமட்டல் தான் எடுக்கிறது.. இப்போதே என்னை ஒரு பரத்தையின்/ சிறுமியளின் இல்லத்திற்கு அழைத்துப் போ என்றார்.. எட்டி உதைத்தார்..

பக்கத்தூரில் வசிக்கும் நாட்டியக்காரியோ
அவள் அளிக்கும் சுக இன்பத்திற்கு பதிலாக
வேறு பண்டங்கள் எதையும் பெற்றுக் கொள்ளமாட்டாள் பகரம் தங்க நகைகளையே
பெறுவாள் என்பதால் .. நளாயினி தன் தாலியை .. கயிற்றிலிருந்து கழற்றி .. அக்கயிறில் ஒரு மஞ்சள் கிழங்கை கோர்க்கிறாள் .. மேலும் நள்ளிரவு
என்பதால் அவருக்கு குளிராமல் இருக்க
ஒரு பெரியப் போர்வையை அவருக்குமேல்
போர்த்தி .. ஒரு பெரிய கூடையில் அவரை
இருத்தி பரத்தை வீட்டிற்குக் கொண்டு போகிறாள் .. நடைபாதையெங்கும் வியாபாரம் முடித்து நள்ளிரவு வரும் ஊரார்கள்
நளாயினியைப் பழித்தார்கள் ..அவள்
கணவனை அவளே பரத்தையிடம் அழைத்துப்
போகிறாளே என்று.. ஆயினும் அவள் அதைப் பொருட் படுத்தாமல் .. கொண்டுச் சென்றாள்

பரத்தை வீட்டை அடைந்து .. தாசியின் படுக்கையில் படுக்கவைத்துவிட்டு
அவ்வயர்ச்சியையும் பொருட் படுத்தாமல்
அவ்வாசலிலேயே இருந்தாள் .. கிழவன் வேடத்தில் ..இருப்பது இளைஞன் எனத் தெரியாமல் அவரை அணுகிய பரத்தைப்பெண் .. அவர் மோகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் .. வெளியில் வந்தவள் .. எப்படித்தான் இவனுடன் தாம்பத்யம் செய்கிறாய் .. உடனே இவனை இங்கிருந்து கொண்டுபோ என்கிறாள் ..

சூரியன் அஸ்த்தமனமாகி வானம் இருளத் துவங்கியது.. சின்னச்சின்னதாக நட்சத்திரங்கள் உதித்து வானில் சிரிக்கத் துவங்கிற்று .. தன்னுடைய இச்சையைத் தீர்த்த
குஷியுடன் .தனக்கு அயர்வாக இருக்கிறதாகச் சொல்லி உடனே தன்னை இங்கிருந்து கொண்டுப்போ என தன் புண்ணானக் கால்களால் நளாயினியை உதைத்து ...
உத்தரவிட்டார்..

அவள் உலர்ந்துபோன மனதுடன் உலகையே மறந்து இனியொரு மழைத் தூறுதலின் முன்பு
கணவனை வீட்டிற்குக் கொண்டுச் சேர்க்க வேண்டுமே என்ற நினைப்பில் கணவனைச் சுமந்து வேகம் வேகமாய் நடந்து சென்றாள் நளாயினி..

அவளுடையப் பொல்லாதநேரம் ..
வழியில் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்படவேண்டும் என்று அவ்வூர் மன்னனால் தண்டனை வழங்கப்பட்டு
கூர்மையான மரத்தில் உட்காரவைத்து
பிறகு ரத்தம் சொட்ட தொங்கிக் கொண்டிருந்த மகரிஷி மாண்டவ்யரை கவனமில்லாமல்
அவர் கால்களை .. அவள் தலைகொண்டக் கூடையால் மோதிவிட்டாள் ..வேதனையின் உச்சியிலிருந்த மகரிஷிக்கு நளாயினி சுமந்திருந்த கூடையின் விளிம்புகள் உரசி
அவர் பாதங்கள் இரண்டும் ஊஞ்சல் போல் ஆட வேதனை அதிகரித்தது ..

கழுமரக் கூர்மை அவர் உடலை இன்னும் ஒரு அங்குலம் இறக்கியது .. தாங்க இயலா வேதனையில் .. தன்னை இடித்தவர் யாரென்றுப் பார்க்க .. உடனே கூடையில்
இருந்த மெளத்கல்யரை சுமந்துசெல்லும்
நளாயினி மகரிஷியின் கண்களுக்குத் தென்பட்டாள்..

தன்னை இடித்ததுமின்றி நின்று பதில் சொல்லாமல் திமிராகப் போகிறாளே
ஏ பெண்ணே தன்னை இடித்துவிட்டு
எதுவும் நடவாததைப்போல ஓடுகிறாயே
எந்தக் கணவனுக்காய் நீ மெனக்கெட்டு
சுமந்துபோகிறாயோ அக்கணவன் நாளை விடியலில் இறந்துவிடுவான் என மகரிஷி
சபித்துவிடுகிறார் ..

இதைக் கேட்ட நளாயினி ஒருநொடி அதிர்ந்து
திரும்ப மகரிஷியிடம் வந்து .. அய்யனே என்‌கணவனின் ஆணைக்கிணங்கிப் போனதால் என்னால் எதையும் கவனிக்க முடியவில்லை .. அதற்காக விடியும் தருணம் என்னைக் கைம்பெண் செய்வதற்கு பதில்
என்னை தண்டியுங்கள் ஒரு பாவமும் செய்யாத என் கணவரை விட்டுவிடுங்கள் என மன்றாடியும் .. மகரிஷி அமைதிகாத்து மீண்டும்
கண்மூடி தியானம் சென்றுவிடுகிறார் ..

செய்வதறியாது நின்ற நளாயினி.. முப்பத்து முற்கோடி தேவர்களே .. தேவர்களின் தேவன் இந்திரனே .. நளாயினியாகிய நான் பத்தினி எனில் இனி இந்த இரவு விடியாதிருக்கட்டும் என சபித்த ஒருநொடி .. உலகத்தின் இயக்கமான காற்றும் இதர சப்தமும் நின்று
மீண்டுயிர்ப் பெற்றன..

தன் நடையைத் தொடங்கி கணவனை வீடு சேர்த்துவிட்டு வழப்பமான சேவைகளை செய்துமுடித்துவிட்டு உறங்கினாள் ..

அவள் சபித்ததுபோல் அந்த இரவு விடியாமலே போனது .. அவள் சக்திக்கிணங்கிய சூரியன்
மேரு மலைக்குப் பின்னால் போய் தன்னை ஒளித்துக் கொண்டான் .. இந்திரன் எத்தனைக் கேட்டும் அவன் வெளிவர மறுத்துவிட்டான்..

உடனே இந்திரன் மாண்டவ்ய மகரிஷியைச் சந்தித்து நிகழ்ந்ததைக் கூறி மகரிஷியை கழுமரத்திலிருந்து இறக்கி வலிப்போக்கச் செய்து .. அவர் நளாயினிக்களித்த சாபத்தை திரும்பப் பெற்றதும்..நளாயினி தன் வாக்கை திரும்பப் பெற்றாள் .. உலகம் விடிந்தது ..

அதன் பிறகுதான்

தன் மனைவியின் பத்தினித் தன்மை கருதி மெச்சிய மெளத்கல்யர் தன் உருமாரி நளாயினியிடம் வந்து அவளைத்து முத்தமிட்டுக் கேட்கிறார்.. என்‌மீது உனக்குள்ளக் காதலை அறிகிறேன் ..
என்றவர் காதல் மயக்கத்தில்
ஈரேழு உலகத்தில் உனக்குப் பிடித்த ஆண்மகன்கள் யாரென்றுக் கூறு
அவர் வடிவில் வந்து உன்னைப் புணர்ந்து
உன்னில் இன்பமழைப் பொழிகிறேன்
என்றார்...

திருமணமான நாளிலிருந்து ஆண் வாடையே அறிந்திராத நளாயினி .. கூட்டெரிந்த மோகத்தில் இந்திரன் முதல் அவளறிந்த
ஆண்கள்வரை ஒவ்வொருவராகப் பெயர்ச்சொல்ல ஆரம்பித்தாள் ..

மெளத்கல்யரும் சளைக்காமல் அவள் கூறிய
ஆண்களின் உருவமெடுத்து அவளுடன் கூடினாள் .. மகிழ்வூட்டினார்.. ஆனால் ஒவ்வொரு நாளும் வேறு ஒருவரைப்போலவே
உருவெடுத்து அவளை உறவுக்கொள்ளும்படி சொல்லுகிறவள் .. தன்னை ஒருநாளும் கணவன் உருவை கேட்கவே இல்லையே என வருந்துகிறார் .. என்றாவது தன் பெயரைக் கூறமாட்டாளா என்று பொறுமையுடன் காத்திருந்தார்..

வருடங்களும் கடந்துபோயின .. ஆனால் ஒரு பொழுதும் நளாயினி மெளத்கல்யரின் பெயரைக் கூறவே இல்லை .. மனம் வெறுத்த மெளத்கல்யர் ஒருநாள் தன்னுடைய தாம்பத்யத்தில் வெறுப்படைந்தவர்.. சுகத்தில் திளைத்து மயக்கத்தில் இருந்த நளாயினியிடம் .. நானும் இன்றுவரை என்றாவது .. என் பெயரைக் கூறுவாய் என்று தவித்திருந்தேன் .. நீயும் என் பெயரை சொல்லவே இல்லை இனியும் சொல்வாய் என்ற நம்பிக்கையும் இல்லை.. கேட்டுப் பெறவும் எனக்கு விருப்பம் இல்லை என்றுக் கூறினார்.

அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் கிறங்கிய பார்வையுடன் மெல்ல இழந்தாள் நளாயினி..
முனிவரே தங்களை விரும்பி காதலித்துத்
திருமணம் செய்துக் கொள்ளவில்லை நான்
நிர்பந்தத்தில் தான் மனைவியானேன்..

ஆனால் தங்களுடன் மனப்பூர்வமாகச் சேர்ந்து இல்வாழ்வில் வாழும் மனநிலையிலேயே பள்ளியறை நுழைந்தேன் .. ஆனால் உங்கள் சோதனைக்குட்படுத்தி என் இளமைக் கனவுகளைக் கொன்று வேதனைப் படுத்தினீர்.

ஆனாலும், தாங்களே என் ப்ராணநாதன் எனக்
கருதிக் கொண்டு .. தங்களுக்கே சேவை செய்துவந்தேன் .. மனதால் கூட பிற ஆடவர்களை எண்ணாமல் ..என் வயதுக்கே உரிய காமத்தை அடக்கி வாழ்ந்தேன்..

அழகிலோ வயதிலோ எனக்கு ஏற்றவராக இல்லாதபொழுதும் தாங்களே என் கணவர்
என் உடலுக்கு சொந்தக்காரர் எனக் கருதியிருந்தேன் .. ஆனால் தாங்களோ ..
முதல் முதலாக நம்முறவில் இணையும் தருணத்தில் கூட மனைவி என்ற உணர்வு இல்லாமல் வேறு எந்த ஆடவனுக்கோ என்னைத் தாரை வார்ப்பதற்கு ஈடாக வேறுருவெடுத்து என்னைப் புணர்ந்தீர்கள்
உங்கள் விருப்பம் அவ்வாறாகிப்போனபோது
இல்பந்தத்தில் இருக்கும் நான் எவ்வாறு
உங்கள் உடலைக் கேட்பேன் என்று எதிர்ப்பார்த்தீர்கள் என்றுக் கேட்டாள்..

நளாயினியின் உண்மை வார்த்தைகள் மெளத்கல்யரை சங்கடப்படுத்தின..
அவள் கேள்விக்கு தன்னிடம் ஞாயமான பதிலேதும் இல்லை இன்ற உணர்வு அவரைக் கோபப்படுத்தியது ..

கோபத்தின் உச்சத்திலும் தன் குற்ற உண்ர்வை மறைக்கும் முயற்சியாக
நளாயினியை நீ என்னாலும் சரி, நீ கணவனாக என்னுடன் தாம்பத்ய உறவுக் கொள்ள தயாராக இல்லை என்பதே உண்மை..

நீ அடுத்தப் பிறவியில் ஐவருக்கு மனைவியாக பார்க்கும் ஆண்கள் யாவரும் உன்னைப் புணரும் ஆசையில் பகை உருவாகிநீ அலைக்கழிக்கப் படுவாய் .. ஐவருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் ..
இன்னொருவரின் மேல் காதலாகி .. தீராதக் காதலில் வாழ்ந்து இறப்பாய் என்று சாபமிட்டார் ..

அதனாலேயே அவளின் அடுத்தப்பிறவியில் துருபதன் மகளாகி .. ஐவருக்கு மனைவியாகி
கெளரவர்களின் பார்வைக்கு காமாக்னியாகி
கர்ணனை ஒருதலையாகக் காதலித்து மரித்தாள் ..

மெளத்கல்யரின் சாபத்தை ஏற்றுக்கொண்ட நளாயினி .. சின்னப் புன்னகையுடன் பெண்களுக்கு காதலும் காமமும் அன்பும்
தீராது .. அதனால் தான் அவள் தன்னுடையக் கணவன் காதலன்.. குழந்தைகள் எல்லோரிடமும் .. எப்பொழுதும் அன்பாக இருக்க முடிகிறது..ஆனால் ஆண்கள் அனைவரும் தங்களுடைய குற்ற உணர்ச்சியை கோபத்தினாலேயே மறைக்க முயல்கிறீர்கள்.. இது பொது விதியாக இருக்கிறது. ஒரு பெண்ணுடன் அவன் புணர்ந்த உடனேயே அவன் வெற்றிக் கொண்டதாக மமதையில் அவள் அவனுடையக் காலடியில் விழுந்துகிடக்க வேண்டுமென்று நினைக்கிறான்.
பெண்ணுடலை மட்டுமல்ல அவள் மனதையும்
ஒருசேரப் புணரவேண்டும் ..அப்பொழுதுதான் அந்த உறவு பூரணமடைகிறது..

இத்தனை வருடம் என்னை மகிழ்வித்தேன் என்ற மமதையில் .. நீங்கள் சாபம் கொடுக்கிறீர்களே அதை மனையாள் என்பதால் மனப்பூர்வம் ஏற்கிறேன்.

ஆனால் இத்தனை வருட உறவில் நீங்கள் என்னை ஒருநாளும் திருப்திப் படுத்தவில்லை
என் உடலை மட்டுமே உங்களால் திருப்த்திப் படுத்த முடிந்தது மனதை அல்ல .. அது இன்னும் காதலுக்காக ஏங்குகிறது..

காதலால் நிறைந்த கணவனின் .. அன்பான அணுகுமுறையால் மட்டுமே திருப்திகரமான உறவைத் தரவியலும் ..அதுவே சுகமான தாம்பத்யமும் .. யார்யாரோ உரவில் வந்து என்னிடம் உறவுக் கொண்டால் அது யாரு யாருக்கோப் போன உறவேத் தவிற இன்றுவரை உங்களுக்கோ எனக்கோ நடந்த உறவு என்று எதுவுமே ஒன்றுக் கிடையாது என்று .. எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல்
சரியாக பேசினாள் நளாயினி..

மெளத்கல்யரும் அவள் வார்த்தையில் உள்ள உண்மைப் புரிய ஒரு பெண்ணில் முன்னால் தாம் தோற்று நிற்கிறோமே என்று அவருக்கு அவமானமாகவே இருந்தது..

பெண்ணுடலில் எவ்வளவு வெறியுடன் இயங்கினாலும் அது முழுமையாக
அவளுடைய ஆத்மாவில் இணைவது இல்லை .. ஆத்மார்த்தமான காதலுடன் இணையும்போது மட்டுமே ஒருப்பெண்ணை வெற்றிகொள்ள முடியும் என்ற உண்மை அறிவு நிறை மெளத்கல்யருக்கு அன்றே
தெளிந்தது ..

இரண்டாவதுக் கேள்வி

க்ருஷ்ணன் நினைச்சிருந்தா தன்னுடைய ஷக்தியால் உடனேயே ஒரு ப்ரம்மாண்ட ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கலாமே .. ஏன் குருக்‌ஷேத்ரம் வந்தது ..

பதில் - ஒரு வார்த்தை யில் சொல்ல வேண்டும் என்றால் கர்மா ... கேள்வி 1 ற்கு நான் சொல்லிய கதையில் இருக்கும் அதே கர்மா தான் .. குருக்ஷேத்ர போருக்கான அறவழியைச் சொல்லிற்று ..அப்படியென்றால் .. கிருஷ்ணன் மனித பிறப் பெடுத்தமை யால் .. பூமியில் வகுத்து கடை பிடித்த அறத்தைப் பின் பற்றுதல் இன்றியமையாமை ஆகும்.

எழுதியவர் : அனுசரன் (30-May-19, 1:22 pm)
பார்வை : 1009

மேலே