மனித நேயம்…

மனித நேயம்… !

மனிதா மனிதா எங்கே
மனித நேயம் ?

மலிவாக மனிதர்கள்
கிடைக்கும் நம் நாட்டில்
மனித நேயம்
மறைந்து விட்டதோ…!

மக்கள் தொகை பெருகிவிட்டது
மனிதன் வாழ வேண்டும்
என்பதற்க்காக
மனிதனின் தனித்துவ உயர்வான
“ மனித நேயத்தை ”
“ Money ” கொன்று

மண்ணில் புதைத்து
நேயம் இல்லா மனிதம்
சாயம் பூசப்பட்ட “ Money ” ஐ
மன்னவனாக மகுடம் சூட்டி
மகிழ்ந்து கொண்டிருக்கிறது…!

மழைக்கு உன் கூரை நிழலில்
ஒதுங்கிய மனிதனை
மனசாட்சி இன்றி
உன் மேல் ஏறி நிற்பது போன்று
உணர்வில்லா இருதயத்தோடு
உற்சாகமாய் தள்ளினாயோ….!

காலையில் சாப்பிட்டதை
மாலையில் அசைபோடும்
மாட்டை பார்த்ததும்
மனம் பதறி
பசு பசியில் இருக்கிறதாக என்னி,

வாழை பழத்தோடு
ரொட்டி துண்டுகளையும்
சேர்த்து அதின்
வாயில் திணிக்கும்
வள்ளல்களே…!

ஒரு வேளை உணவில்லாமல்
பசி வாட்டத்தோடு
கை நீட்டும் இந்த
பசி உடையவனை
பசுவாக கூட பாராமல்
பரதேசியாக பார்த்து
இவ்வளவு வேகமாய்
தம் திரு முகம்
திருப்பி கொள்வது ஏனோ…!

கரும்புக்கு தெரியவில்லையே
பணம் படைத்தவனுக்கு இனிப்பையும்
ஏழைக்கு கசப்பையும்
கொடுக்க வேண்டும் என்று…..!

எறும்புக்கும் தெரியவில்லையே
ஏழையை மட்டும் கடிக்க வேண்டும்
பணம் படைத்தவனுக்கு
பயந்து ஒதுங்கி விட வேண்டும் என்று….!

உன் காலின் கட்டை விரலினால்
மிதிபட்டு மடியபோகும்
சிறு எறும்பின் தைரியம் கூட
உனக்கில்லையே…!

முதல்வா உனக்குதான் தெரியும்
நான் பணமில்லா ஏழை என்று
என் நாவிற்கு எப்படி தெரியும்….!

உன் வீட்டு வாசலுக்குள் போக
மறுத்தாய் நியாயம்
உன் வாய்க்குள் போகும்
அறுசுவை உணவு
என் வாய்க்குள் போகும்போது
மறிப்பது என்ன நியாயம்…..!

ஏழையின் நாவிற்க்கு இனிப்பு
பிடிக்காது என்று நினைத்தாயோ…!
பணமில்லாதவன் வயிற்றுக்கு
பசியும் இல்லை என்று நினைத்தாயோ…!

இறைவனின் படைப்பில்
இயற்கை எல்லாம்
இயங்கி கொண்டிருக்கிறது
இன வேறுபாடின்றி….!

இளநீ தன் சுவையை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

மல்லி தன் மணத்தை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று….!

தென்றல் தன் தன்மையை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

அருவி தன் ஆர்ப்பரிப்பை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

வெண்ணிலவு தன் வெளிச்சத்தை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

அலைகடல் தன் ஆழத்தை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

வெள்ள பெருக்கு தன் வேகத்தை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

சீறும் புயல் தன் சீற்றத்தை
மாற்றிக்கொள்வதில்லையே
ஏழை பணக்காரன் என்று…!

உனக்கு மட்டும் ஏன் இந்த
மதவெறி…?
மொழிவெறி…?
இனவெறி…?
நிறவெறி….?

மகத்துவ மனிதனே
மனம்திருபம்பாயோ…!
உன்னைப்போல்
என்னையும் நேசிப்பாயோ…!

எழுதியவர் : ரகு மீஷாக். ஜ (31-May-19, 5:16 pm)
சேர்த்தது : ரகு மீஷாக் ஜ
பார்வை : 199

மேலே