காதலி

கருத்த என் கன்னத்தில்
அவள் வைத்த முத்தங்கள்
அத்தனையும்
மாணிக்க கற்களாய்ப் பதிய , பின்
கண்ணாடியில் பார்த்த நான்

வேகமாய் கைக்குடையால் எடுக்க
' அது நான் உனக்களித்த என் காதல்
சின்னம்' என்று அவள் சொல்ல
அதனால் நான் இப்போது அதை
என் இதயத்திற்கு எடுத்து செல்கின்றேன்
அங்கே பூட்டிவைக்க என்றேன்.

மாணிக்கமாய் முத்து தந்தவள்
இதழ்கள் திறந்து முத்துச் சிரிப்பு
தந்தாள் அதையும் அள்ளி மனதில்
பூட்டி வைத்தேன் அவள் காதல் சின்னமாய்!
என் காதலியே பேரெழில் நீ இப்படித்தான்
என் மனதை அள்ளிக்கொண்ட ரத்தினம் என்றேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jun-19, 3:22 pm)
Tanglish : kathali
பார்வை : 151

மேலே