உன் அழகிய விழிகளில் ஏனடி கண்ணீர் 555
என் தோழியே...
உன் அழகிய விழிகளில்
ஏன் இன்னும் கண்ணீர்...
காலங்கள் கடந்து
செல்கிறது என்றா...
உன் கரம் கோர்த்து
நடை போடவும்...
உன் கண்ணீரை
துடைக்கவும்...
உன் குருதியில் ஒரு
உயிர் உருவாகும்...
அந்தநாள் உனக்கு
தொலைவில் இல்லை...
நீயும் சுமப்பாய் உன்
கருவில் அழகிய மழலையை...
என் உயிர் தோழியே
இனியும்
கண்ணீர் வேண்டாம்...
உன்
அழகிய விழிகளில்...
காலமும் நேரமும்
கூடிவருகிறது உனக்காக...
என் தோழியே.....