கண்டேன் ,காதலித்தேன்
கண்டேன்,காதலித்தேன்.🌹💔
திங்கள் அவளை கண்டேன் .
அவள் மீது அளவில்லா காதல் கொண்டேன் .
செவ்வாய் அதனை ரசித்தேன்.
கொவ்வை அதனை ருசிக்க துடித்தேன் .
புதன் மஹா திசையில்
பிறந்தவளோ
அறிவுச்சுடராய் ஜொலிக்கிறாள்
வியாழன் குரு பகவான்
சண்ணதியில் சந்தித்தோம்
வெள்ளி அவள், கள்ளி
கண்களால் காதல் சொன்னாள்
சனி இனி எனக்கில்லை
கனி அவளை காதலித்ததால்
ஞாயிறு மலர்தூவி
எங்களை அன்புடன்
வரவேற்றது.
- பாலு.