காதல் கூடியதே

நானும் அவளும் இப்படித்தான்
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்
நான் அவளை பார்க்க அவள் என்னை
அவள் காதலைத் தேடி நான்……….
அவள் கண்கள் பேசவில்லை
இதழ்களும் விரியவில்லை
புன்னகை இல்லை அவள் முகத்தில்
ஆனால் வெறுப்பேதும் இல்லை
அவள் முகத்தில்……….இவளென்ன
பேசாமடந்தையோ என்று நான் நினைக்க
நேற்றோடு பத்து நாட்கள் ஆனது
இப்படியே வளர்ந்த எங்கள் சந்திப்பு
இன்று …...பதினோராவது நாள்…
மெல்லத் திறந்ததோ அவள்
இதயக் கதவு......ஆச்சரியம்
அவள் கண்களின் கருமணிகள்
என்னைப் பார்த்து கயல்போல் துள்ள
இமைகள் மூடி திறந்து …..மூடி திறக்க
வில்போல் புருவங்கள் விரிந்திட
செந்தாமரை இதழ்கள் சற்றே விரிந்து
இதழோரம் தேன் சிந்தும் புன்னகையும்
ததும்பி நிற்க , இதோ அவள் மௌனமும்
கலைய. அவள் வாயும் திறந்து edho
பேச முனைய , என் காதில் அது
'அன்பே உன்னோடு பேச எனக்காசை'
என்று கேட்க … இன்னும் அவளருகில்
சென்றேன் நான் …. இப்போது புன்னகை
மறைந்து மெல்ல சிரித்தாள் பைங்கிளி
கண்ணால் கிண்டி இழுத்து ,,,,,,,
புரிந்துகொண்டேன் இது காதல் என்று
முயற்சி வீண்போகவில்லை என்று
சொன்னது மனமும் , இப்படித்தான்
என் காதல் பிரயத்தனம் வெற்றி தந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (3-Jun-19, 1:42 pm)
பார்வை : 133

மேலே