இயற்கை

பூரண பௌர்ணமி நிலவொளியில்
நதிக்கரையில் ஓரத்தில் நான்
நதிக்கரையில் மணலெல்லாம் வெள்ளியானது!
வெள்ளிநிலவின் நிலவொளியில் !
இரவின் இருளெல்லாந் நீங்கியது ;

கரையோரம் தழைத்தோங்கிய மரங்கள்,
அவற்றுள் என் உள்ளதைக் கவர்ந்தது
அந்த அழகிய குட்டை பனைமரங்கள் ;
அவற்றின் உச்சியில் குடைப்போல்
ஓலைகள் ….. ஓலைகள் கீழ் தொங்கி இருந்தன
தூக்கணாங்குருவி கூடுகள் ……..
நிலவொளிப்பட்டு வெள்ளிக்கூடுகளாய் மாறி இருக்க !
அங்குலம் அங்குலமாய் இப்போது நான்
அந்த கூடுகளின் வெகு அருகில் ……
இரவு நேரம் தூங்கிடும் குருவிகளை தொந்தரவு
செய்யாது அதே சமயம் அருகில் பார்த்து மகிழ்ந்திட
சென்றடைந்தேன் ……… இரவின்நிசப்தம்
அப்பப்பா…..இயற்கையில் இப்படியும் ஓர் பேரெழிலா ?
வெறும் காய்ந்த புல், சருகுகள், வைக்கோல் இவற்றால்
எப்படி பின்னினவோ இப்படியோர் கூடுகளை இந்த
சின்னஞ்சிறு சுட்டி குருவிகள்….ஒற்றையறை …..
அரைக்குளரை என்று விதம் விதமாய் கூடுகள்
இவை இந்த குருவிகள் … குருவிகளா இல்லை
மயனின் தேவ தச்சர்கள்தான் குருவியாய் வந்து
இக்கூடுகளை அமைத்து கொடுத்தனரோ இந்த
சிட்டுக்குருவிகளுக்கு கூட்டுகுடுத்தனம் நடத்த!
அப்படிதான் என்று நான் நினைக்கிறன் !

சிறுவனாய் என் தந்தையுடன் இங்கு வந்து போனது
இக்கூடுகளைக் கண்டு வியந்தது மனதில்
இன்னும் பசுமையாய் இருக்க, இப்போது
எனக்கோர் அவா- இயற்கை அன்னையே,
என்னை இந்த ஒரு ராத்திரிப்பொழுது தூக்கணாங்குருவியாய் மாற்றிவிட்டு அந்த கூட்டிற்குள் விட்டுவிடு ,
அந்த கூட்டின் உள்ளமைப்பைப் பார்த்து மகிழ்ந்திட,
ஆனால் ஒருபோதும் தூங்கும் குருவிகளை எழுப்பாது,
பின்னர் மீண்டும் விடியும் முன்னே மனிதனாய் மாற்றி
நதிக்கரையில் கொண்டு சேர்த்துவிடு அதுவே போதும்
நான் மகிழ்ந்திட இயற்கை அன்னையே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jun-19, 5:34 pm)
Tanglish : iyarkai
பார்வை : 320

மேலே