ஓவியனின் காதல்
அவள் கண்களை வரையும் போது
என் கைகள் நடுங்குகின்றது
அங்கேதான் என் எண்ணம் முழுவதும் ,
சற்று பிசகினாலும் எந்தன்
எண்ணமெல்லாம் பொய்த்துவிடும்
நான் ஓவியன் இல்லை என்றாகிவிடும்
காதலிலும் தோல்வி காண்பது உறுதி
எவ்வாறாயினும் என் காதல் அவள் கண்களில்
பிரதிபலிக்க வேண்டும் அல்லவா
என் உண்மைக் காதல் அவள் கண்களில்
காதலுக்கே என்னை அர்ப்பணித்து
காதலின் ஏக்கம் உணர்வில் கொணர்ந்து
அவள் கண்களிலும் படர விட்டேன்
ஆகா/ இதுதான் உண்மையின் காதல்
இந்த ஓவியத்தில் எப்படி அவள் கண்கள்
படபடவென துடிப்பது போல் எனக்கு தெரிகிறதே ,
ஓவியன் நான் என்னை பாராட்டினேன் ,
கச்சிதமாய் கருவிழிகள் இரண்டும்
அமைந்து விட்டது
இதுவன்றோ ஓவியனின் மகத்துவம்
காதலில் வெல்ல ஓவியம் வரைந்தான்...