நல்லிரவு

வானின் கரு நீல மேனியில்,

பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !

நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!

இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!

கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு

எழுதியவர் : (10-Jun-19, 1:32 am)
சேர்த்தது : ரஞ்சித் பிரபு க
பார்வை : 62

மேலே