வேண்டாம் போதி

"வேண்டாம் போதி"
இசையை பக்தியுடன் காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா பித்தனாக;
நிசப்தத்தை நேசத்துடன் காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா புத்தனாக;
ஆத்ம மந்திரத்தை வேதமென காதலித்தேன்
மனக்கண்ணில் கிருஷ்ணா மனிதனாக;
என் மன்னனை முழுமையாக காதலித்தேன்
அவன் சொல் மிக்க மந்திரமில்லை ;
"வேண்டாம் காதலுடன் போதி " என்றான்
"வேண்டும் காதலில் ஜோதி " என்றேன்;
வயோதிபத்தின் வாசலில் பக்தி பெருக
நித்தமும் தேடுகிறேன் என்னை என் கிருஷ்ணனுள்!
~ நியதி ~
( Love makes life divine)