வானவில்

யாருடைய வில் அது?
அம்பின்றி தனித்து உள்ளதே!
வருணன் விட்டுச்சென்றதா?
இல்லை
கதிரவன் கொண்டு வந்ததோ?
எதுவாயினும் ஏழு வண்ணம் பூசி - வானத்தில்
மிளிர்கிறதே அந்த வானத்து வில்!
இல்லையெனில்
நாம் பூசிய வண்ணம் சிதறி
மண்ணவள்மேல் விழுந்து வானில் பிரதிபலித்தோ?

எழுதியவர் : arhtimagnas (13-Jun-19, 12:04 pm)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : vaanavil
பார்வை : 206

மேலே