இரவுகளையும் வீசியெறி

இதயங்களில் ஏக்கங்களை
___ இருத்தி போனாலே
இனியேனும் விடியுமா
__இல்லறங்கள் சிறக்குமா
இதுவும் கடந்துபோகும்
___இன்னும் தள்ளிப்போ
இசைக்க மறந்துவிடும்
___இரக்கமில்லா நினைவுகள்
இனிக்க வில்லையே
___ இன்றைய பொழுதிலே
இமையினுள் உருளும்
___ இன்னல்களை உதறிப்போ
இடமெங்கும் வெல்வாய்
___இக்காலம் புரிவாய்
இயல்பே வாழ்வென்று
__இவற்றை கொள்வாய்
இருளான மனமும்
___இருளை பிரித்துவிடுமே
இலக்கின்றிப் அலங்கரிக்கும்
---இரவுகளையும் வீசியெறி
இறந்து கிடைக்கும்
--இல்லாதவை விளக்குகளாய்
இனிதே வளர்ந்தே
---இயற்கையது சொல்லுமே
இருள் மறையவே
---இன்பம் நிகழும்
இருளில்லா சிந்தனையே
--இன்பத்தின் இதிகாசம்
இவ்வளவு ஆனந்தத்தின்
---இலட்சியத்தின் வெற்றி
இதையே உலகம்
---இயம்பும் விரும்பும்
இருளை திறந்தே
--இன்னும் பயணித்து
இயங்கவே வாழ்வின்
---இசையும் விளங்கும்
இரகசிய பெட்டகமாய்
---இவ்வுலகில் பயணிக்கிறதே
இருளில் இருந்தே
--நீந்தி வந்துவிடு
காலியான வாழ்வும்
---கரையை காணுமே
கலக்கம் இன்றியே
----கரையை கடக்கவே
இருட்டினில் கொள்ளாது
---இடியென பாய்ந்தே
இரவை கடந்துவிடு
--சிறகு முளைத்துவிடும்
கவி அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan rajaratnam (14-Jun-19, 2:24 am)
பார்வை : 222

மேலே