வாழ்க வள்ளுவம்

மனித வாழ்க்கைக்கு இரண்டடியில் அறம்
வகுத்த தெய்வ புலவனே - முப்பால்
புகட்டி எக்காலத்திற்கும் சிக்கலின்றி
சீரோடு வாழ வழிக்காட்டியவனே வணக்கம்

பதிமூன்று இயல்கள் படித்து நடந்தாலே
துன்பம் நெருங்கா வாழ்க்கை - இவ்வையகத்தில்
குறள் நெறி செப்பும் அறிவுரைக்கு ஈடு
இணை உண்டோ

வள்ளுவனின் சொல்வாக்கு கேட்டு நடப்பவன்
வாழ்க்கையில் செல்வாக்கோடு வாழ்வான் - தவறி
தலைக்கணம் கொண்டு நடப்பவன் தரணியில்
தன்தடம் தெரியாமல் தாழ்வான்

எழுதியவர் : செல்வமுத்து மன்னராஜ் (15-Jun-19, 5:54 pm)
Tanglish : vazhga valluvam
பார்வை : 97

மேலே