கண்ணம்மா

கூரைக்குடிசை கும்மியடிக்க , உச்சிசூரியன் சுட்டதடி
கால்கள் ரெண்டும் நோகுதடி கண்ணே உனக்காய் காத்திருக்கிறேன்
அல்லி பூ நீ முடிச்சி கூர சீலை நீ உடுத்தி
குங்கும பொட்டு நெத்திக்காரி குடிசையை விட்டு வந்தால் என்ன
கார்மேக நிறத்தழகி , அனிச்சமலர் கண்ணழகி
மாமன் இங்கு காத்துக்கிடக்கன் மனசிரங்கி வந்தால் என்ன
உன் கால் கொலுசு சிங்குங்களிலே சில்லுசில்லாய் சிதரிபோனேன்
உன் பாதசுவடு தேடி பரதேசியாய் அலையிறேனடி
பின்னழகி கொசுவத்துல சிக்கி நான் போகையில
உன் கருங்கூந்தல் நடனத்துக்கு மெட்டு தான் போட்டேனடி
செந்தாமரை உதட்டழகி செங்காந்தள் மொழியழகி
நீ தொட்டு இட்ட மையில் நான் தூள்தூளாய் உடைந்தேனே
அன்ன நடை நீ போட உனக்கு பின்னால் ஜதி நான் பாட
உன் ஒற்றை பார்வை போதுமடி ,அதற்காய் தவம் கிடக்கும் என் ஏக்கமடி
மீன் பார்வை கொண்ட மின்னலே எங்கே நீ என் கண்ணம்மா ...

எழுதியவர் : ஹேமாவதி (17-Jun-19, 11:15 am)
சேர்த்தது : hemavathi
Tanglish : kannamma
பார்வை : 625

மேலே