நினைத்த போதே
மனமே மனமே வதங்காதே
மாறும் நிலையெண்ணி குமுறாதே
கழிதல் சிதைதல் மாறிவிடும்
கலங்கி நின்றால் பயமே வரும்
உடலின் திடமது மனதால் வரும்
உறுதியோடு உழைந்தால் வெற்றி தரும்
கருணை நிலையதைக் கருத்தில் கொள்
கடுமை உழைப்பை நீ பயிற்சியில் கொள்
நினைத்த போதே நன்மையைச் செய்
நெடு நாட்கள் எதையும் தள்ளி வைக்காதே
பருவங்கள் போலே யாவும் மாறும்
பகுத்து அறிந்தால் வெற்றிகள் சேரும்.
--- நன்னாடன்.