மண்ணில் தங்கம் கிடைக்கையிலே

கேட்போமா கேட்போம் கேள்வி பல
கிடைக்கின்ற பதிலே யாவற்றிக்கும் தலை

கதிரதற்கு சூடு தந்தது எவை?
காற்றில் நீரை கடத்துவது எவை?

மண்ணில் தங்கம் கிடைக்கையிலே
மரத்தில் அவைகள் காய்ப்பதில்லை ஏன்?

படிப்பால் அறிவது தெளிந்தாலும்
பாவச் செயல் அது பெருகுவது ஏன்?

நெடும்பகை மனதில் வளர்வதற்கு
கொடிய எண்ணம் மனதில் நிலைப்பது ஏன்?

அடுத்தடுத்து தீமைத் தோற்றாலும்
அதனை கைப்பற்ற துடிப்பது ஏன்?

உழைப்பவன் வாழ்க்கையில் உருகுவதும்
ஏய்ப்பவன் வாழ்வினில் செழிப்பதும் ஏன்?
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (18-Jun-19, 8:25 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 117

மேலே