பேரழகி தவழ்ந்தாள் மண்ணில்
வெண்ணீரை விட்டான் தந்தை
வெண்கல நிறத்தில் பெற்றாள் அன்னை
விண்ணவரும் மண்ணவரும் விக்கித்து
நின்றே காண பேரழகி தவழ்ந்தாள் மண்ணில்
புன்னகை செய்தால் கூட புல்லரித்து நின்றார் பலரும்
கின் என சிரித்தாள் அவளும் கிரகங்கள் சிலிர்த்து அதிரும்
குழவி அவள் குமரி ஆனாள் குதூகலம் கூடலாச்சு
குண்டு கண்கள் சுழல சுழல கூர்பார்வை வீசி சென்றாள்
எட்டுத்திக்கு எல்லை எல்லாம் இவள் வரவை நோக்கலாச்சு
எந்நேரமும் இவளுக்காக எங்கும் பாதுகாப்பாச்சு
அவளைப் பார்த்தவர் அவள் செல்லும் பாதையோர் எல்லாம்
ஆனந்தத்தில் மூழ்கி அந்தரத்தில் பறக்கலானார்.
---- நன்னாடன்.