கொள்ளும் கொள்கையின்

கொள்ளும் கொள்கையின் பெருமை மிகு பிறப்பு இது
அருமையான மிகு அறிவு உண்டு
ஆற்றல் மிகு செயலைக் கொண்டு
அறிவோடு பாதை வகு

அருகம்புல்லின் வேரைப் போலே
ஆழமாக அறிந்து தெளிந்து
அழகு உலகின் மேன்மை புரிந்து
அடர்வான வாழ்க்கை பழகு

கொள்ளும் கொள்கையின் குறிப்பறிந்து
செல்லும் பாதையில் நேர்மைக் கண்டு
நிறைவான பயணம் செய்து
சேவைகளோடு சிறப்பை எய்து

சின்னது பெரியது என்று
செயலை எதையும் பாராமல்
சிறப்பானது தேவையானது என
சீரான நோக்கம் கொண்டு செய்வதை படுத்து அழகு.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (19-Jun-19, 6:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 33
மேலே