படுத்துகிறார் என் இரவையே

பேருக்குப் பெண்ணாக - தம்
ஊருக்குத் தண்ணாக - நம்
பாருக்கு எனைப் படைத்து - வீட்டு
வேருக்கு நிலமாகி இன்று நிலத்திற்கு உறமாகி
அன்றைக்கு என் அன்னைக்கு தகப்பனவர் - என்றைக்கு நான் பிறந்தேனோ - அன்றைக்கே அவர் உலகம் நான் தானாம்... இன்று
இரவின் மடியில் இளைப்பாறும் எனக்கு,
இரவையே அறிமுகப்படுத்தியவர்....
படுத்துகிறார் என் இரவையே....
என் பார்வையில் படாமல்
புகைப்படமாகிவிட்டு....

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (18-Jun-19, 11:51 pm)
பார்வை : 304

மேலே