பிறந்தநாள் பலவிதம் - ஓய்வின் நகைச்சுவை 186

பிறந்தநாள் பலவிதம்
ஓய்வின் நகைச்சுவை:186

மனைவி: ஏன்னா 5 மாசத்திற்கு முன்னேதானே உங்க பர்த்டேயை பெரிசா குழந்தைகள் எல்லாம் கொண்டாடி னாங்க. இன்னைக்கு என்ன எல்லோரும் பேஷ்புக் ஒரே பர்த்டே விஷ் போட்டிருக்காங்க!

கணவன்: அடியே நான் பொறந்த ஆக்சுவல் டேட் ஒன்னு, வளர்ந்தப்போ தொல்லை தாங்காமே சீக்கிரமா ஸ்கூலே போட்ட டேட் ஒன்னு, நல்ல பொண்ணு கிடைக்கணும்னு ஜாதகத்திலே போட்ட டேட் ஒன்னு, உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரெம்பேனு பயந்திருவீங்கன்னு உங்க அப்பாகிட்ட சொன்ன டேட் ஒன்னு, அடையாளம் தெரியக்கூடாதுனு பேஷ்புக்லே போட்ட டேட் ஒன்னு.

மனைவி: ஏன்னா எங்க வீட்டிலேதான் அப்படி செஞ்சாங்கன்னு இந்தனை நாள் பயந்துண்டே இருந்தேன். இப்போதான் நிம்மதி ஆச்சு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Jun-19, 5:05 pm)
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே