ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 006

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல் 1 : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்னுயிர் தோழா
படம் : குளிர் 100

கண் மூடினால் இருளேது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

------------------------------------------------------------------------------------------

பாடல் 2 : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
படம் : ஐயன்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தன்தாய் பெண்ணே பெண்ணே

இந்த ரெண்டு பாடல்களிலும் முதல் வரி ஒரே கருத்தைத்தான் வேற வேற வார்த்தை பயன்பாட்டுல சொல்லுது.
ரெண்டாவது வரி கருது வேறுபட்டாலும் ,ஆச்சர்யமா அவைகளும் கூட ஒரே மாதிரி பேச்ச பத்தின ஒரு கருத்தா அமைஞ்சுருக்குது.
இதை பத்தின உங்க கருது என்ன?

எழுதியவர் : (21-Jun-19, 1:49 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 91

சிறந்த கட்டுரைகள்

மேலே