மனிதனே

வேலி யெல்லாம் மதிலாகி
வேற்றுமை மனிதரில் நிலைத்ததாலே
காலி பண்ணின ஓணான்கள்
காட்டுப் பக்கம் நோக்கியேதான்,
வேலி யதற்குச் சாட்சிசொல்ல
வேண்டாம் இனிமேல் ஓணானே,
நாலும் தெரிந்ததாய் மனிதர்களே
நன்றாய்ச் சொல்கிறார் பொய்ச்சாட்சியே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (24-Jun-19, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : manithane
பார்வை : 83
மேலே