காதல் குழப்பம்

தரையில் நடக்கும் எறும்பை போலே
நெஞ்சம் இருந்தது...
தூக்கம் இன்றியே ...!!
ஏனோ அறியவே...?
நானும் பார்த்து குழம்பினேன்...
இரவில் வருகின்ற நிழலினில் கூட
நானும் எரிகின்றேன்...
நிழவின் ஒளியிலே...
உடலும் உருகிறேன்...
ஒளியில் உருகிறேன்...

உலகில் எழும் இயற்கை விதிகளை-இந்த
உயிர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை...
அதுபோல் காதலில் தோன்றும் குழப்பங்களை
யாரும் கண்டுகொள்ள வில்லை...
உலகில் சிறந்தது காதல் என்பதனை
உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்...
வாழ்க்கை முறிந்தால் மலரும் பூக்கள் போல
சேர்ந்தாடும் மீண்டும்...
கண் பேசும் வார்த்தைக்கு
ஒலிகளும் மொழிகளும்
தேவையில்லை தானே...
மேகம் போல் பறப்பதெதற்கு?
காக்கை போல் இறகுகள்
மனித உயிர்க்கு!

இரவில் பார்க்கும் வானில் மீன்களெல்லாம்
பகலில் வருவதில்லை ஏனோ?
உலக அழகி நிலவை பார்த்துக்கொள்ளும்
விண்ணின் ராணுவம் தானோ....!
மழையில் ஆடும் மயிலை போல எந்தன்
நெஞ்சம் உனைக்கண்டு ஆட...!
பிழைகள் இல்லா வாழ்வின் துகளினை
உந்தன் கண்களும் தேட...!
பொன் பொருட்கள் எதுவுமின்றி-இந்த
உலகினில் வாழ்வது கேள்வி குறிகள் தானே!
நீர்,நிலங்கள் ஏதுமின்றி-இந்த
உலகமும் அழிவது இயற்கை நியதி தானே...

எழுதியவர் : H.S.Hameed (26-Jun-19, 8:03 am)
சேர்த்தது : HSahul Hameed
Tanglish : kaadhal kulapam
பார்வை : 73

மேலே