அவள்

காலைப்பொழுதினிலே கண்ணம்மா
நீ அருண கிரணங்கள் பட்டு அலர்ந்த தாமரையடி
மாலையிலோ கண்ணம்மா நீ, மல்லிப்பூ
வெண்மையில் அமைதி, மணத்தில் என்
உள்ளத்தில் குளிர்ச்சி , இரவிலோ கண்ணம்மா நீ
சந்திரனின் தண்ணொளிப்பட்டு மலர்ந்த
அழகு மலர் குமுதமடி, இப்படித்தான்
முவ்வேளையிலும் இயற்கையின் எழிலாய்
காட்சி தந்து என்னுள்ளத்தை கொள்ளைகொண்டாய்
எப்போது என்னவளாய் என் துணைவியாய்
வந்தமைவாயோ அந்த இனிய நேரம் தேடி நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jun-19, 2:58 pm)
Tanglish : aval
பார்வை : 278

மேலே