என்னவன்

கார்முகில் கரு நீலம் -அந்த
அண்டகோளங்கள் தன்னுள் கொண்ட
வானும் நீலம்-மண்நீர்க் கடலும் நீலம்
அன்று மூன்றடியில் விண்ணையும்
மண்ணையும் அளந்து மூன்றாய்
அவன் தலையை மண்ணில் அழுத்திய
மாலவன் நிறமும் நீலம் - என்னவனே
நெடுந்துயர்ந்தவனே திண் தோளா
நான் மாறா காதல் கொண்ட நீயும்
நீல நிறத்தோனே என் மனத்தைக்
கொள்ளைக்கொண்ட நிறம் நீலம்
நான் உன் நிலவு பால் நிலவே
என்றும் உனைத்தேடி உன்னில்
வாழ்ந்திட நினைக்கும் நிலவுப்பெண்
கார்முகிலாய் காதலனே கன்னி நான்
உன்மீது வானளவு காதல் கொண்டேன் அறிவாயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Jun-19, 3:38 pm)
Tanglish : ennavan
பார்வை : 288

மேலே