விபத்து என் அனுபவம்

JULY -1-2015( 4 YEARS before same day)

வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் வரன்முறையின்றி வட்டமடித்த இறுதி நாள்
உண்மை போலி அறியாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டிய இறுதி நாள்.........
என் சரிதத்தின் முதல் பாதி முடிந்த நாள் .......
அரசின் ஆணையினால் தலைக்கவசம் அணிந்த முதல்நாள்

கனவுகள் சுமந்து கல்லூரி சென்ற என்னை கால் உடைத்து முடங்க வைத்த விபத்து ஏற்பட்ட நாள்

மரணம் என்னை நெருங்கியும் .. தவற விட்ட நாள்

யார் நிஜம் யார் பொய் என எனக்கு உணர்த்திய நாள்

காதலினும் மேலான அன்பு அன்னை,தந்தையிடமே கிட்டும் என எனக்கு பதியவைத்த நாள்

மீண்டும் குழந்தாய் பிறந்த அனுபவம் பெற்ற நாள்

வாழவே முடியாதென மற்றவர் துவண்டுவிடும் நிலையை நான் பெற்றோர், நண்பர், உறவினரின் பரிவு பாசத்துடன் எதிர்கொள்ள துவங்கிய நாள்

குழந்தைபோலவே மெல்ல மெல்ல நடை பழக 4 மாதம் ஆகியது ...

குணம் பெற 8 மாதம் ஆகியது
இந்த நாட்கள் என் வாழ்வின் என்னை உணமையாக நேசித்தவர்களுக்கான பக்கங்கள்
இனியும் அவர்களே என் சொந்தங்கள்

என் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம்
கேள்வி - என்னை விபத்தில் காத்த காரணம் ?
விடை -ஏதோ கடமை என்னால் ஆகவேண்டும் என இருப்பது புலனாகிறது..

அதை தேடிய என் பயணம் தொடர்கிறது ...... மணிவேல்.A.

எழுதியவர் : Manivel (2-Jul-19, 12:10 am)
சேர்த்தது : மணிவேல்
Tanglish : vibathu en anupavam
பார்வை : 73

மேலே